வீடற்ற நிலையிலும் மக்களுக்கு சேவையாற்றும் நபர்

வீடற்ற நிலையிலும் மக்களுக்கு சேவையாற்றும் நபர்


கனடாவில் தங்குவதற்கு வீடு இல்லாத நபர் ஒருவர் நடு வீதியில் இருந்தாலும் மக்களுக்கு வழங்கும் சேவைகளை சரியான முறையில் வழங்கி வருகின்றார்.

றொரன்டோ வைத்தியசாலையில் முழுநேர மருந்தக தொழில்நுட்பவியலாளர் ஒருவரே இவ்வாறு மக்களுக்கு சேவையாற்றி வருகின்றார்.

கொவிட் தொற்று பரவி பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இந்த முன்னரங்க சுகாதார பணியாளரின் சேவை பாராட்டப்படுகின்றது.

வாகமொன்றிலேயே தற்பொழுது இந்த தொழில்நுட்பவியலாளர் தாங்கியுள்ளார்.
கனடாவில் ஆண்டுதோறும் சுமார் இரண்டரை லட்சம் பேர் வீடற்றவர்களாக மாறுகின்றனர்.

ரிம் மெக்பார்லேன் என்ற தொழில்நுட்பவியலாளர் நீண்ட காலமாக வாகனத்தில் தங்கியிருந்தாலும் சுகாதார பணிகளில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles