வெறித்தனமாக ஆடிய டம்ப பே 3- 2 கோல் கணக்கில் வெற்றி !!! தொடர் சமன்

வெறித்தனமாக ஆடிய டம்ப பே 3- 2 கோல் கணக்கில் வெற்றி !!! தொடர் சமன்

எட்மன்டனில் இன்று நடைப்பெற்ற ஸ்டான்லி கிண்ண  இறுதி போட்டி தொடரின் இரண்டாவது போட்டியில் டம்ப பே லைட்னிங் அணி வெற்றி பெற்று தொடரை 1-1 க்கு என்ற கணக்கில் சமபடுத்தியுள்ளது.

டலாஸ் ஸ்ராஸ் அணிக்கும் டம்ப பே லைட்னிங் அணிக்கும் இடையிலான போட்டி ஆல்பர்ட்டா மாகணத்தின் தலைநகரமான எட்மன்டனில் இன்று நடைப்பெற்றது.

7 போட்டிகளை கொண்ட இந்த இறுதி தொடரின் முதல் போட்டியில் டலாஸ் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னனி வகித்தது.

ஆனால் இன்றைய போட்டியில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வெறித்தனமாக  ஆடியடம்ப பே  லைட்னிங் அணி  ஆரம்ப சுற்றிலே மூன்று கோல்களை அடித்து அரங்கத்தையே சும்மா அதிர செய்தது.

பி.பாயின்ட் , ஓ.பலட், கே.ஷட்ன்கிரிக் ஆகியோர்  மூன்று கோல்களை போட்டனர்.

ஆயினும் இரண்டாவது சுற்றின் போது டலாஸ் அணி அபரமாக விளையாடி இரண்டு கோல்களை போட்டாலும்  அதன் பின்னர் அவர்களால் எதையும் போட முடியாத வகையில் டம்ப பே சூழ்ச்சியுடன் மரபு வழி போர் வீரர்கள் போன்று எதிரிகளை தடுத்து நிறுத்தினார்கள்.

ஆட்டம் முடியும் போது டம்ப பே  3 – 2 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்து வெற்றீட்டினர்.

போட்டியின் முன்றாவது போட்டி புதன்கிழமை இடம்பெறும்.

administrator

Related Articles