வெளிநாடுகளில் அவதியுறும் இலங்கை தொழிலாளர்களை மீட்பேன்-தீபா வேலாயுதம்!!

வெளிநாடுகளில் அவதியுறும் இலங்கை தொழிலாளர்களை மீட்பேன்-தீபா வேலாயுதம்!!

உலகளாவிய ரீதியில் ஊதிய கொள்ளையில் சிக்கி தவிக்கும் இலங்கை தொழிலாளர்களை மீட்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புலம்பெயர் தொழிலாளர் முன்னணியின் தலைவர் வேலாயுதம் ருத்ரதீபன் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களை, தொழிற்சங்கங்களின் இணைத்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்றமை தொடர்பில் வெளிநாடுகளிலுள்ள தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இந்த பேச்சுவார்த்தைகளின் பலனாக வெளிநாடுகளிலுள்ள சில தொழிற்சங்கங்கள் இணக்கத்தை வெளியிட்டுள்ளதாகவும் வேலாயுதம் ருத்ரதீபன் தெரிவிக்கின்றார்.

அத்துடன், இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தொழில்புரியும் இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் வகையில் 2008ஆம் ஆண்டு தேசிய புலம்பெயர்ந்தோர் கொள்கை பிரகடனம் ஏற்படுத்தப்பட்ட போதிலும், அந்த பிரகடனம் இன்றும் செலுபடியற்றதாகவே காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்

administrator

Related Articles