வெளிநாட்டவர்களை நம்பாது, உள்நாட்டவர்களை நம்புங்கள் பிரதமர் முன்னிலையில்,அர்ஜுண

வெளிநாட்டவர்களை நம்பாது, உள்நாட்டவர்களை நம்புங்கள் பிரதமர் முன்னிலையில்,அர்ஜுண

இலங்கை கிரிக்கெட் அணி, உலகக் கிண்ணத்தை கைப்பற்றி, இன்றுடன் 25 வருடங்கள் பூர்த்தியடைந்தமையை கொண்டாடும் வகையிலான நிகழ்வு இன்று நடைபெற்றது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் கொழும்பில் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது.

இதன்போது இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு பதக்கங்களை வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

1996ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றும் சந்தர்ப்பத்தில், அணிக்கு தலைமைத்துவத்தை வழங்கிய அர்ஜுண ரணதுங்க இந்த நிகழ்வில் உரையாற்றியுள்ளார்.

இலங்கையில் மிக திறமையான பயிற்றுவிப்பாளர்கள் இருப்பதாக அவர் இதன்போது கூறியுள்ளார்.

இலங்கையிலுள்ள மிக திறமையான பயிற்றுவிப்பாளர்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளாது, வெளிநாடுகளிலிருந்து பயிற்றுவிப்பாளர்களை சேவைக்கு அமர்த்துவது நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலைமைகளை மாற்றி, இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ ஆகியோரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

administrator

Related Articles