வெளிநாட்டு நிதி புழக்கத்தை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி

வெளிநாட்டு நிதி புழக்கத்தை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி

நாட்டுக்குள் வெளிநாட்டு நிதி புழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்குடன் வதிவிடமல்லாத முதலீட்டாளர்களுக்கு அரசாங்கத்தின் கடனீட்டு ஆவணங்களில் மற்றும் எனைய பிரிவுகளில் முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் வசதிகள் செய்யும் தேவை இலங்கை மத்திய வங்கியினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக, ஒரு வருடம் தொடக்கம் 2 வருட காலம் வரையில் அமெரிக்க டொலர் ஃ இலங்கை ரூபாவை கொள்வனவு செய்தல் -விற்பனை பணப்பரிமாற்றம்’ வசதிகளை அறிகப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதி சபையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அமைவாக செயற்படும்பொழுது அனுமதிப்பத்திரம் பெற்றவர்களின் வணிக வங்கிகளுக்கு ஏற்படக்கூடிய வெளிநாட்டு நாணயம் தொடர்பிலான இடையூறை வரையறுக்கும் நோக்கில் கீழ் குறிப்பிட்ட வகையில் செயற்படுவதற்காக நிதி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

• ஒரே வெளிநாட்டு அந்நிய செலாவணி விகிதத்தின் கீழ் அடிப்படை வெளிநாட்டு அந்நியச் செலாவணி பரிமாறல் மற்றும் பின்னர் மேற்கொள்ளப்படும் பரிமாறல்களை மேற்கொள்ளுதல்.

• சம்பந்தப்பட்ட முதலிட்டை பூர்த்தி செய்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு அந்நியச் செலாவணி பரிமாறலுக்காக, அபராதத்திற்கு உட்பட்டதாக அதுவரையில் நிலவும் அந்நியச் செலாவணி விகிதத்திற்கு இந்த பரிமாறலை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குதல்.

• இந்த வசதிகளினால் நாட்டுக்குள் அந்நியச் செலாவணி புழக்கம் அதிகளவில் காணப்படுமாயின் மாத்திரம் ஏற்புடையதுடன், ஆக குறைந்தது 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடக்கம் 1000 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான ஆக கூடிய தொகைக்கு உட்படுத்துதல்.

• இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொழுது அமெரிக்க டொலர் / இலங்கை ரூபா பரிமாறல் விகிதத்தில் தேய்மானம் இடம்பெற்றால் இலங்கை மத்திய வங்கிக்கு ஏற்படக்கூடிய நட்டத்தை திறைசேரியின் செலவு என்ற ரீதியில் கவனத்தில் கொள்ளக்கூடிய வகையில் எதிர்காலத்தில் இலங்கை மத்திய வங்கியினால் தனது ஈவு தொகைகளை திறைசேரிக்கு மாற்றும் பொழுது தீர்த்தல்.

administrator

Related Articles