வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட மூன்று இடங்கள் இன்று மாலை முதல் தனிமை!

வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட மூன்று இடங்கள் இன்று மாலை முதல் தனிமை!

வெள்ளவத்தை கோகிலா வீதி உட்பட கொழும்பில் மூன்று இடங்களை இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்வேல் ஐலன்ட் பகுதியில் உள்ள ஹ_னுப்பிட்டடிய கிராமசேவையாளர் பிரிவினை இன்று மாலை ஐநது மணி முதல் முடக்கவுள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கருவாத்தோட்டத்தின் 60வத்தை வெள்ளவத்தையின் கோகிலா வீதி ஆகியவற்றையும் இன்று மாலை முதல் தனிமைப்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாட்டில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு தளர்த்தப்படும் மற்றும் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படும் பகுதிகள் தொடர்பிலான தகவல்களை கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் இன்று (06) வெளியிட்டுள்ளது.

கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, புளுமெண்டல் மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுகளிலும், விஜயபுர கிராம சேவகர் பிரிவிலும் நாளை (07) அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிரான்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டாம் வீதி, வாழைத்தோட்டம், மாளிகாவத்தை, தெமட்டகொட, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, கொம்பனிவீதி பொலிஸ் பிரிவின் செகந்த கிராம சேவகர் பிரிவு, பொரள்ளை பொலிஸ் பிரிவின் வனாத்தமுல்ல கிராம சேவகர் பிரிவு மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவின் சாலமுல்ல கிராம சேவகர் பிரிவும், லக்சந்த சேவன தொடர்மாடி குடியிருப்பும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளி பொலிஸ் பிரிவின் ரன்திய உயன வீட்டுக் குடியிருப்பு மற்றும் பெர்கசன் வீதியின் தென் பகுதி ஆகியன தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோன்று, கொம்பனிவீதியின் ஹ{னுபிட்டிய கிராம சேவகர் பிரிவு, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவின் 60ஆவது தோட்டம் மற்றும் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவின் கொகிலா வீதி ஆகியன நாளை அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்படுகின்றன.

மேலும், வத்தளை பொலிஸ் பிரிவின் கெரவலபிட்டிய, ஹேக்கித்த, குருந்துஹேன, எவரிவத்தை மற்றும் வெலிகடமுல்ல ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் நாளை  (07) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பேலியகொட பொலிஸ் பிரிவின் பேலியகொடவத்தை, பேலியகொட கங்கஹபட, மீகஹவத்தை மற்றும் பட்டிய வடக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

களனி பொலிஸ் பிரிவின் தனிமைப்படுத்தலும் நாளை முதல் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் மேல் குறிப்பிடப்பட்ட பகுதிகளை தவிர்ந்த ஏனைய பகுதிகளின் தனிமைப்படுத்தல் நாளை அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்படவுள்ளதாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. 

administrator

Related Articles