வெள்ளையர்களின் கால்களை பிடித்து இழுக்கும் நண்டு

வெள்ளையர்களின் கால்களை பிடித்து இழுக்கும் நண்டு

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகளை கொண்ட T20 தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையடைந்துள்ளது

நேற்று (18) இரவு அஹதாபாத்தில் நடைபெற்ற 4 ஆவது T20 போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

இதற்கமையவே T20 தொடர் சமநிலையடைந்துள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான தீர்மானமிக்க 5 ஆவதும், இறுதியுமான போட்டி நாளை (20) நடைபெறவுள்ளது.

நேற்றைய (18) போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடுமாறு இந்தியாவை கேட்டுக்கொண்டது.

இந்த அழைப்பிற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் சூரிய குமார் யாதவ் பெற்ற 57 ஓட்டங்கள் துணையுடன் 8 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றது.

இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஜோப்ரா ஆச்சர் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர்களை அச்சுறுத்தினார்.

இதனையடுத்து 186 என்ற கடின இலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி இறுதிவரை எதிர்நீச்சல் போட்டும் இலக்கையடைய முடியாமல் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை பறிக்கொடுத்து 177 ஓட்டங்களை பெற்று 8 ஓட்டங்களால் தோல்வியை பரிசாக பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்தின் துடுப்பாட்டத்தில் ஜேசன் ரோய் அதிகூடிய 40 ஓட்டங்களை பெற்றதுடன் இந்திய அணியின் பந்து வீச்சில் சர்துல் தர்கூர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

போட்டியின் ஆட்டநாயகனாக சூரிய குமார் யாதவ் தெரிவானார்.

administrator

Related Articles