ஸ்டான்லி கிண்ணத்தை சுவிகரிக்க போவது யார்?

ஸ்டான்லி கிண்ணத்தை சுவிகரிக்க  போவது யார்?

கொரோனா காரணமாக தடைப்பட்டிருந்த ஐஸ் ஹாக்கி தொடர் மீண்டும் விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. இறுதி போட்டி தொடரின் முதல் போட்டி இன்று எட்மன்டனில் நடக்கிறது.

இறுதி போட்டிக்கு தெரிவான டம்பபே லைட்னிங் அணியும் டாலஸ் ஸ்ராஸ் அணியும் மோதுகின்றன.

இதில் டாலஸ் அணி மேற்கு பிராந்திய செம்பியன் , டம்ப பே கிழக்கு பிராந்திய செம்பியன் இதனால் கனடா அமெரிக்க நாடுகளில் வாழும் ஹாக்கி ரசிகர்களின் பார்வை முழுவதும் இன்று ஆல்பர்ட்டா மாகணத்தின்  தலைநகரமான  எட்மன்டன் மீதே பார்வை இருக்க போகிறது.

இந்த இறுதி போட்டி தொடரில் சிலவேளைகளில் 7 போட்டிகள் வரை விளையாட கூடும் . இதில் ஆக கூடுதலாக வெற்றி பெறும் அணி இந்த சீசனின் ஸ்டான்லி கப் சம்பியன்.

போட்டி அட்டவனை

Game 1: Saturday, 7:30 p.m.
Game 2: Monday, 8 p.m.
Game 3: Wednesday, 8 p.m.
Game 4: Sept. 25, 8 p.m.
Game 5: Sept. 26, 8 p.m.
Game 6: Sept. 28, 8 p.m.
Game 7: Sept. 30, 8 p.m.

இம்முறை டலஸ் ஸ்ராஸ் அணி செம்பியன் கிண்ணத்தை சுவிகரிக்கும் என்பதே பலரது கணிப்பு ஏனெனில் சிரேஷ்ட பல வீரர்கள் அந்த அணியில் இருக்கிறார்கள்.

குறிப்பாக அவர்களுடைய கோல் காப்பாளரான அன்டன் கூடோபின் , ஏனைய வீரர்களான  டைலர் செகுய்ன், டிம் தோமஸ் ஆகியோரின் சிறப்பான விளையாட்டு டம்ப பே அணிக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என சொல்கிறார்கள்

இன்று இரவு இடம்பெறும் ஆரம்பமாகும் இந்த  போட்டியை கண்டுகளிக்க மட்டுப்படுத்தப்பட்ட ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

administrator

Related Articles