“அதுக்கு இவன் சரிவரமாட்டான் “

“அதுக்கு இவன் சரிவரமாட்டான் “

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது என மு.க அழகிரி தெரிவித்துள்ளார்.

தி.மு.கவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

அதன்பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர்.

ஆனால் கட்சி தலைமை அழைப்பு விடுக்கவில்லை. 

இந்நிலையில், அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து மு.க அழகிரி தனது ஆதரவாளர்களுடன் இன்று மதுரையில் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அழகிரி கூறியதாவது….

* தமிழகத்தில் மு.க ஸ்டாலின் எப்போதுமே முதல்வராக முடியாது.
* ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வழங்கப்போகிறேன் என்றார்கள் நான் ஒப்புதல் தந்தேன் 
* தம்பிக்கு துணை முதல்வர் பதவி என தந்தை கூறினார். நான் சம்மதித்தேன் 
* உடல் நிலை சரியில்லாத கருணாநிதியை கட்டாயப்படுத்தி திருவாரூரில் போட்டியிட செய்தனர் என தெரிவித்தார்.

administrator

Related Articles