ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணிப்புரியும் 2000 ஊழியர்களுக்கு ஆப்பு !!

ஸ்ரீலங்கன் விமான சேவையில் பணிப்புரியும் 2000 ஊழியர்களுக்கு ஆப்பு !!

ஸ்ரீலங்கன் விமான சேவை மறுசீரமைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் தலைவரான அசோக் பத்திரகே கூறுகிறார்.

உலக புகழ்பெற்ற வர்த்தக சஞ்சிகையான புளும்பேர்க் மார்கட் ஏசியா சஞ்சிக்கு அளித்த விசேட பேட்டியில் ஊழியர்களின் 7 ஆயிரத்தில் இருந்து 5 ஆயிரமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அவர் அந்த பேட்டியில் மேலும் கூறியுள்ளார்.

2019 ஆண்டுடன் ஒப்பிடுகையில் கொரோனா வைரஸ் காரணமாக வருமானத்தில் 75 வீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு செலவு குறைப்புக்களை நமது நிறுவனம் மேற்கொள்கிறது.

எமக்கு கடன் கொடுத்தவர்களிடம் விசேட சலுகைகளை எதிர்பார்த்து பேச்சுவார்த்தை நடத்துகிறோம்.

அதுமாத்திரமா ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் தன்னிச்சையாக ஓய்வு பெறும் திட்டமொன்றையும் உருவாக்கி உள்ளோம்.இதில் வெற்றியும் கண்டுள்ளோம்.

இப்படி சொன்ன தலைவர் முக்கியமாக குத்தகை கட்டணத்தை 18 வீதத்தால் குறைத்தாகவும் சொன்னார்.

மேலும் சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் திட்டம் எதுவும் அரசாங்கத்திடம்  இல்லை அதற்கான எந்தவொரு செயற்பட்டையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை.

எமது நிறுவனத்தை பலப்படுத்த நாம் அரசின் உதவியை நாடியுள்ளோம் அதுமாத்திரமன்றி சர்வதேச பினை முறிகள் ஊடாகவும் நிதி சேகரிப்புகளை மேற்கொள்ள இருக்கிறோம்.

கொவிட் காரணமாக இருக்கும் தனிநபர் இடைவெளி காரணமாக விமான சேவை தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் விமானத்திற்குள்ளே சமூக இடைவெளி சாத்தியமாகும் என்பதை நான் நம்பவில்லை. அதேபோல தற்போது முழுமையான சேவை அதிகரிப்புகளை மேற்கொள்ள முடியாது உள்ளது.

நாம் சிங்கப்பூர், சீனா, இங்கிலாந்து நாடுகளுக்கான சேவைகளை அதிகரிக்க எண்ணி இருந்தோம். ஆனால் கொரோனா காரணமாக சிங்கப்பூர் விமான நிலையம் இன்னும் முழுமையாக இயங்கவில்லை.

அதேபோல லண்டனோ  கொரோனா சட்டத்திட்டங்களை கண்டிப்புடன் செயற்படுத்துகிறது.எவ்வாறியினும் அடுத்த இரண்டு வருடங்களில் ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் அரசாங்கத்தின் படிபடியான உதவியுடன் நல்ல நிலைக்கு வரும் என தலைவர் அசோக் பத்திரகே கூறினார்.

administrator

Related Articles