ஸ்ரேயாஸ் ஐய்யருக்கு ஏற்பட்டுள்ள நிலை…

ஸ்ரேயாஸ் ஐய்யருக்கு ஏற்பட்டுள்ள நிலை…

இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐய்யர் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் எஞ்சிய இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடமாட்டார் என அறிவிக்கப்ட்டுள்ளது.

பூனேயில்; நேற்று நிறைவடைந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் களத்தடுப்பில் ஈடுப்பட்டிருந்த போது அவர் காயமடைந்தார்.

ஐய்யர் தனது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இன்று ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன்போது காயத்தின் தீவிரம் அதிகமாக இருப்பதால் அவருக்கு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், வைத்தியர்களின் ஆலோசனைக்கு பின்னரே அவருக்கு அறுவை சிகிச்சை வேண்டுமா? இல்லையா? என்பது பற்றி முடிவு செய்யப்படும் என இந்திய அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் எஞ்சிய இரு போட்டிகளிலும் ஐய்யர் விளையாடமாட்டார் என்பதுடன் அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதேவ் அல்லது சுபுமன் கில் ஆகிய இருவரில் ஒருவர் விளையாடுவர் என தெரிவிக்;கப்படுகின்றது.

இதேவேளை ஐய்யரின் காயம் குணமடைய நீண்ட நாட்கள் எடுக்கும் என்பதால் அவர் எதிர்வரும் IPL தொடரையும் இழக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இதனால் டெல்லி அணியை வழிநடத்தும் பொறுப்பு உபத் தலைவர் ரிசப் பந்துக்கு வழங்கப்படும் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும் அவர் குணமடைந்து அணிக்கு திரும்புவதை எதிர்பார்ப்பதாகவும் அவ்வாறு அணிக்கு திரும்பினால் தலைவர் பதவி அவருக்கே மீண்டும் வழங்கப்படும் என டெல்லி கெப்பிடல்ஸ் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதேவேளை காயத்தால் அவதிப்படும் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களான இயோன் மோர்கன் மற்றும் சேம் பிலலிங்ஸ் ஆகியோரும் இரண்டாவது போட்டியில் விளையாடுவதில் சந்தேகமேற்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை (26) மறுதினமும், IPL தொடர் அடுத்த மாதம் 9 ஆம் திகதி முதல் மே 30 ஆம் திகதிவரையும் நடைபெறவுள்ளது.

administrator

Related Articles