ஹமில்டனில் கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

ஹமில்டனில்  கைதிகள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்


ஹமில்டன் சிறைச்சாலையின் கைதிகள் உணவு தவிhப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 50 முதல் 60 வரையிலான கைதிகள் இவ்வாறு உணவு தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.

கொவிட்-19 நோய்த் தொற்று தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை என கைதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 72 கைதிகளுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

இதில் 51 கைதிகள் எனவும் ஏனையவர்கள் சிறைச்சாலை பணியாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

உரிய சுகாதார ஏற்பாடுகள் தமக்கு செய்து கொடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளனர்.

administrator

Related Articles