ஹெலிகொப்டர் விபத்தில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்த விமானிகள்

ஹெலிகொப்டர் விபத்தில் தெய்வாதீனமாக உயிர் பிழைத்த விமானிகள்


ஹெலிகொப்டர் விபத்து ஒன்றில் தெய்வாதீனமாக அதன் விமானிகள் உயிர் பிழைத்துள்ளனர்.

பிரிடிட்ஷ் கொலம்பியாவின் போவன் தீவுகளில் இந்த ஹெலிகொப்டர் விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.

பெல்-212 ரக ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

கார்டனர் வீதிக்கு அருகாமையில் இந்த ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து கீழே வீழ்ந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து காரணமாக ஹெலிகொப்டர் சேதமடைந்த போதிலும் தெய்வாதீனமாக இரண்டு விமானிகளுக்கும் உயிர் ஆபத்து ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிறு காயங்களுடன் இந்த இரண்டு விமானிகளும் உயிர் பிழைத்தது பெரும் அதிர்ஸ்டமாக கருதப்படுகின்றது.

administrator

Related Articles