சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாஇ இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து கருத்துக்களம் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளார்.
அங்குஇ சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணத்திற்கான இலங்கையின் உரிமை தொடர்பாக அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.
‘முன்பு இல்லாத சவால்களை இப்போது எதிர்கொள்ளும் உறுப்பு நாடுகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம். ஆபத்தில் இருக்கும் நடுத்தர வருமான நாடுகளுக்கான ஆதரவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். சமீபத்தில் உக்ரைன் மற்றும் இலங்கைக்கு எங்கள் ஆதரவை வழங்கினோம். அந்த நாடுகள் செயல்படுகின்றன. சவால்களை எதிர்கொள்ளும் அனைத்து நாடுகளுக்கும் பாராட்டுக்கள்’என தெரிவித்துள்ளார்.