கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவலாயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் கால் ஒன்றை இழந்த ஒருவரும், வணக்கத்திற்குரிய சிறில் காமினி ஆண்டகையும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எச்சரித்து குற்றவாளி கூண்டிற்குள் ஏறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் மைத்திரிபால சிறிசேன பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலையான மைத்திரிபால குற்றவாளி கூண்டிற்குள் ஏமாறாது தவிர்த்தார். இதனையடுத்து அவரை எச்சரித்து குற்றவாளி கூண்டில் ஏறுமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மைத்திரிபால சிறிசேன குற்றவாளி கூண்டில் ஏமாறாது அருகில் நின்றுக்கொண்டிருந்தார்.

அப்போது முறைப்பாட்டாளர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன, குற்றவாளி கூண்டிலுக்கு வெளியில் இருப்பது குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்து எதிர்ப்பை முன்வைத்துள்ளார்.

இதனையடுத்து தனது தரப்பு வாதிக்கு எதிராக தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட வழக்கு சம்பந்தமான அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கான மேன்முறையீடு இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி கூண்டிலில் ஏறவில்லை என மைத்திரிபால சிறிசேனவின் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *