G7 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் இன்று முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

இதற்காக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர்.

முதல் நிகழ்வாக, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டால் பெரும் பேரழிவை சந்தித்த மக்களின் நினைவாக ஹிரோஷிமாவில் உள்ள நினைவரங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இந்த பெரும் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை இதுவரை உறுதியாக தெரியவில்லை.

ஹிரோஷிமாவில் 3 லட்சம் மக்கள் தொகை இருந்த நிலையில் அணுகுண்டு வீச்சில் 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

அதனைத் தொடர்ந்து நாகாசாகியில் வீசப்பட்ட அணுகுண்டு வீச்சில் 70,000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர்.

இந்தத் துயர நினைவுகளைத் தாங்கிக்கொண்டு ஹிரோஷிமா விதிகளில் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பானின் ஹிரோஹிமாவுக்கு வந்த தலைவர்களை நோக்கி குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

”அணு ஆயுதப் போர் வேண்டாம்… உக்ரனை விட்டுவிடுங்கள்… சீனா மீது போர் வேண்டாம்” என்பன போன்ற பதாகைகளுடன் அம்மக்கள் எழுப்பும் குரல் ஹிரோஷிமாவில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போது 90 வயதாகும் சடே: “நான், என் பாட்டி வீட்டில் இருந்தேன். அப்போதுதான் அந்தச் சத்தம் கேட்டது, நான் சுவற்றில் தூக்கி வீசப்பட்டேன். வீட்டிலிருந்த கண்ணாடிகள் உடைந்தன.

என் தந்தையை சகோதரர் பலத்த காயத்துடன் தூக்கி வந்தார். என் தந்தைக்கு உடல் முழுவதும் தீக்காயம். குடிக்க தண்ணீர் கேட்ட என் தந்தைக்கு என்னால் தண்ணீர் வழங்க முடியாமல் போனதை நினைத்து இன்றும் வருத்தம் கொள்கிறேன்.

என் தந்தை சிகிச்சைப் பலனின்றி இரண்டு தினங்களுக்குப் பிறகு உயிரிழந்தார். என் தாயும் உயிரிழந்தார்” என்று கண்ணீர் மல்க கூறுகிறார் சடே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *