IPL கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் (GT) முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிகளும் மோதின.

முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி 50 பந்தில் 4 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 92 ரன்கள் குவித்தார்.

மொயீன் அலி 23 ரன்னும், ஷிவம் துபே 19 ரன்னும், டோனி 7 பந்துகளில் 14 ரன்னும் எடுத்தனர்.

குஜராத் சார்பில் முகமது ஷமி, ரஷித் கான், அல்ஜாரி ஜோசப் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

ஜோஸ் லிட்டில் ஒரு விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்கியது.

விரித்திமான் சகா 25 ரன்னும், சாய் சுதர்சன் 22 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 8 ரன்னும் எடுத்தனர்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் சிக்சர், பவுண்டரிகளை விளாசினார்.

அவர் 36 பந்தில் 63 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

கடைசி 4 ஓவரில் வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் 4 ரன்னும், 18வது ஓவரில் 7 ரன்னும் எடுத்தனர்.

இறுதியில், குஜராத் அணி 5 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சென்னை அணி சார்பில் ஹங்கர்சேகர் 3 விக்கெட் வீழ்த்தினார்.

ரவீந்திர் ஜடேஜா, தேஷ்பாண்டே தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *