இலங்கை அரசாங்கத்திற்கும் ஜப்பானின் முன்னணி வர்த்தகக் குழுவான பசோனா குழுமத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது.

இது ஜப்பானில் உள்ள இலங்கை தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகள், மனித வள மேம்பாடு, ஜப்பானிய முதலீடுகளை இலங்கைக்கு கொண்டு வருவது மற்றும் சுற்றுலா ஊக்குவிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கையின்படி, இலங்கைப் பணியாளர்களை வேலை வாய்ப்புகளுக்காக ஆட்சேர்ப்பு செய்ய விரும்பும் ஜப்பானிய நிறுவனங்களின் ஆன்-சைட் ஆட்சேர்ப்புக்கு பசோனா குழுமம் தனது ஆதரவை வழங்குகிறது.

மேலும், ஜப்பானில் வேலை தேடும் இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஜப்பானிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் முதலீட்டு கருத்தரங்குகள் மற்றும் முதலீட்டு ஆலோசனைகளையும் பசோனா குழுமம் நடத்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *