1988 இல் ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்தமைக்காக பெருவின் முன்னாள் உள்விவகார அமைச்சரும் இரண்டு முறைகள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவருமான  டேனியல் உரெஸ்டிக்கு (Daniel Urresti) சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர் கொலை செய்யப்பட்டு 34 வருடங்களின் பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1988 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிக மோசமான சிவில் யுத்தத்தின் போது, மோதல் உக்கிரமடைந்த நிலையில் ஊடகவியலாளர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக டேனியல் உரெஸ்டிக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமைகளை மீறியமை தொடர்பில் ஆராய்ந்த ஊடகவியலாளரான  Bustios-உம் மற்றுமொரு ஊடகவியலாளரான Eduardo Rojas-உம்  தாக்குதலுக்கு உள்ளானதுடன், காயமடைந்த Rojas அந்த இடத்தில் இருந்து தப்பிச்சென்றுவிட்டாலும், Bustios பலத்த காயமடைந்து அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

பின்னர் இராணுவ அதிகாரிகள் அவரின் உடம்பில் வெடிபொருட்களை போட்டு வெடிக்கச் செய்து கொலை செய்தனர்.

அந்த வேளையில், புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பான கெப்டனாக இருந்த பெருவின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் டேனியெல் உரெஸ்டி 1988 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்  Bustios-ஐ கொலை செய்த சம்பவத்தில் தொடர்புபட்டிருந்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

பெருவில் நீண்ட காலம் அரசியல் ஸ்திரமற்றநிலைமை காணப்பட்டதுடன், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து டிசம்பர் வரை  அந்நாட்டில் ஏழு ஜனாதிபதிகள் பதவி வகித்துள்ளதுடன், சில ஜனாதிபதிகளின் பதவிக்காலம் ஒரு சில நாட்களாக மட்டுமே பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *