10 கோடி ரூபாவை அபராதமாக செலுத்திய சசிகலா!

10  கோடி ரூபாவை அபராதமாக செலுத்திய சசிகலா!

சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, சிறப்பு நீதிமன்றத்தில் அபராதத் தொகையை செலுத்தினார். ரூ.10.10 கோடிக்கான காசோலையை சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர், நீதிபதி சிவப்பா முன் செலுத்தினார்.

முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ஆம் தேதி உத்தேசமாக விடுதலையாக வாய்ப்புள்ளதாகவும் சசிகலா செலுத்தவேண்டிய அபராதத் தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறைவாசம் நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ம் தேதி வரை அனுபவிக்க வேண்டும். அதன் பின்னர் விடுதலை செய்யப்படுவார் என கர்நாடக சிறைத் துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே சசிகலா சிறைக் கைதிகளுக்கான நன்னடத்தை மற்றும் விடுமுறை காலம் உள்ளிட்ட சலுகைகளை பெற்று முன்கூட்டியே விடுதலை ஆவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனால் அவர் விரைவில் வெளியே வர வாய்ப்பு உள்ளதாகவும் அவரது தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தன்னுடைய அபாராதத் தொகையை சசிகலா நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார்.

administrator

Related Articles