1000/= எப்படி கொடுப்பது சொல்லித் தாருங்கள் ?- ரொசன் ராஜதுரை

1000/= எப்படி கொடுப்பது சொல்லித் தாருங்கள் ?- ரொசன் ராஜதுரை


மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வாறு ஆயிரம் ரூபா சம்பளத்தை கொடுப்பது என்பதனை சொல்லித் தருமாறு பெருந்தோட்ட கம்பனிகளின் பேச்சாளர் ரொசான் ராஜதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

கொலம்போ கெசட் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறு பணிக்கும் தரப்பினர் அதனை எவ்வாறு கொடுப்பது என்ற வழிமுறையையும் சொல்லித் தர வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட கம்பனிகள் மிக அதிகளவான நட்டத்தை அடைந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான பின்னணியில் பெருந்தோட்ட நிறுவனங்களின் செலவுகளை பாரதூரமான அளவில் குறைப்பதற்கு நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறு இலங்கை சம்பள நிர்ணய சபை பெருந்தோட்ட கம்பனிகளுக்கு அறிவித்துள்ள நிலையில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பளம் வழங்கும் பிரச்சினை குறித்து பல்வேறு வழிகளில் அணுகி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரம் ரூபா சம்பளத்தை வழங்குமாறு அதிகாரிகள் பணிப்புரை விடுத்துள்ள நிலையில் இது தேயிலைத் துறையின் வீழ்ச்சிக்கு ஏதுவாக அமையக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

administrator

Related Articles