1000 ரூபா கிடைக்க இ.தொ.கா மாத்திரம் பாடுப்படவில்லை,எமக்கும் உரிமையுண்டு – மனோ

1000 ரூபா கிடைக்க இ.தொ.கா மாத்திரம் பாடுப்படவில்லை,எமக்கும் உரிமையுண்டு – மனோ

இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்குள் ஆளுமைமிகு செயற்பாடு இல்லை என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (13) காலை ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறினார்.

“நல்லாட்சியில் தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் நிரந்தர முடிவு எடுக்க முடியவில்லை. அது ஒரு பின்னடைவு, அதை ஏற்றுக்கொள்கின்றேன். நல்லாட்சியில் இ.தொ.கா எமக்கு தோட்ட தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விடயங்களில் ஒத்துழைப்பு வழங்கவில்லை. எல்லா விடயங்களிலும் குறைக்கூறிக்கொண்டே இருந்தார்கள். ஆனால் நாம் அப்படி நடந்து கொள்ளவில்லை. சம்பள பிரச்சினை உள்ளிட்ட விடயங்களில் ஒத்துழைப்புடன் செயற்படுகின்றோம். தற்போது அதிகாரமிக்க மலையக அதிகார சபை கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. எமது ஆட்சியில் மலையகத்தில் தனி வீடுகளை அமைத்து தனித்தனி கிராமங்களாக உருவாக்கியுள்ளோம். ஆகவே எமது ஆட்சியே மலையகத்திற்கான பொற்காலம். ஆகவே தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வாக அவர்களுக்கு தேயிலைக் காணிகள் பிரித்து வழங்கப்பட்டு மலையக விவசாயிகளாக மாற்றப்பட வேண்டும். அதாவது நில உடமையாளர்களாக மாற்றப்பட வேண்டும். அப்படி செய்வதால் தத்தமது உற்பத்திகளை தாமே விற்கும் நிலை உருவாகும். அதுவே நிரந்தர தீர்வாகும். 1000 ரூபா என்பது இடைக்கால தீர்வாகும். 1000 ரூபா கிடைக்க இ.தொ.கா மாத்திரம் பாடுபடவில்லை. எல்லோரும் இணைந்து கைத்தட்டியதால்தான் கிடைத்துள்ளது. எனினும் அடுத்தமாத சம்பளத்திலேயே இதனை அறிய முடியும். பாராளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியிலும் கடும் அழுத்தங்களை பிரயோகித்துள்ளோம். தமிழ் முற்போக்கு கூட்டணியின் நான்கு வருட ஆட்சி காலமே மலையகத்தின் பொற்காலம். இது தொடர்பில் எவருடனும் வாதாட தயார். சம்பள விடயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மலையக சமூகத்தை எடைபோட கூடாது.” என்றார்

administrator

Related Articles