1000 ரூபா தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

1000 ரூபா தொடர்பான விசாரணை ஒத்திவைப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு தொடர்பிலான வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை இன்று (26) மீண்டும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போதே மனு மீதான விசாரணையை எதிர்வரும் 30 ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தேயிலை மற்றும் இறப்பர் கைத்தொழில் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி 20 பெருந்தோட்ட நிறுவனங்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தன.

ஏற்கனவே நெருக்கடி நிலையில் நடத்திச் செல்லப்படுகின்ற பெருந்தோட்ட நிறுவனங்களை அரசாங்கத்தின் வர்த்தமானி காரணமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவில் தொழில் அமைச்சர், தேசிய சம்பள நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

administrator

Related Articles