110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை.. நைஜீரியாவில் வெறிச்செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்!(video)

110 விவசாயிகள் கழுத்தறுத்து கொலை.. நைஜீரியாவில் வெறிச்செயலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்!(video)

நைஜீரியாவின் மைடூகுரி நகரில் அருகே கோஷோபே கிராமத்தில் விவசாய பணிகள் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த போகோ ஹராம் பயங்கரவாதிகள், விவசாய பணிகளை செய்து கொண்டிருந்தவர்களை கடத்தி, கை, கால்களை கட்டிப்போட்டனர். இதையடுத்து துளியும் இரக்கமின்றி 110 விவசாயிகளை கழுத்தறுத்து படுகொலை செய்தனர். மேலும் அங்கிருந்த பெண்களையும் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நைஜீரிய அரசு, கடத்தப்பட்ட பெண்கள் பாதுகாப்பாக திரும்பியதாக தெரிவித்துள்ளது.

நைஜீரியாவில் அரசுத் தரப்பும், போகோ ஹராம், ஐஎஸ் பயங்கரவாதிகளும் மோதிக்கொள்வதில் இதுபோன்று அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். மக்கள் அரசுக்கு தங்களைப்பற்றி தகவல்கள் தருகிறார்கள் என்ற ஆத்திரத்தில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் இதுபோன்ற மனிதத்தன்மையற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொடூர செயலுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

administrator

Related Articles