12 ம் கட்டை வாய்க்கால் பகுதியில் மணல் எற்றும்   டிப்பர் மோதி குடும்பஸ்தர் பலி!

Share

Share

Share

Share

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட 12ம் கட்டை குளக்கட்டு வாய்க்கால் பகுதியில் டிப்பர் வாகனம் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவம்  புதன்கிழமை (20) மாலை 4.00 மணிக்கு பின்பே நிகழ்ந்துள்ளதாக  தெரிய வருகிறது

விபத்து நடைபெற்றதும் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின்  சாரதி  மற்றும் உதவியாளர் அங்கிருந்து  தப்பிச் சென்pருந்தபோதும்  பின்னர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டது

விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவர்  நானாட்டான் பிரதேசத்தில் நாகச் செட்டி பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான  நடராசா ஞானசேகரம்  எனவும் அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காகவும் மேலதிக விசாரணைகளுக்காகவும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிசார் மேற்கொண்டு வருவதுடன் மரண விசாரனையை மன்னார் மரண விசாரனை அதிகாரி எஸ்.ஈ.குணகுமார் மேற்கொண்டுள்ளார்.

(வாஸ் கூஞ்ஞ)

ஒட்டாவாவில் கோவிட் காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில்...
ரொறன்டோவில் வீட்டு விற்பனையில் பின்னடைவு
கனடாவில் மாணவர்கள் தொழில்களில் ஈடுபடுவதில் சிக்கல்
விடுமுறைக் காலத்தில் ஒன்றாரியோ மக்கள் செலவுகளை...
ரொறன்ரோ நகராட்சி இடைத் தேர்தலில் தமிழர்...
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை சம்பவம்...
கனடா முழுவதிலும் போலி நாணயக் குற்றிகள்
நாட்டின் கல்வித்துறையில் பாதக மாற்றம்
டொரண்டோவில் மிகவும் மோசமான குளிர்