19 பந்துகளில் 65 ஓட்டங்களை எடுத்த அன்று ரசல்! காலி அணி “காலி”

19 பந்துகளில் 65 ஓட்டங்களை எடுத்த அன்று ரசல்! காலி அணி “காலி”

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைப்பெற்ற LPL போட்டியில் கொழும்பு கிங்ஸின் அதிரடி ஆட்டம் காலநிலை காரணமாக ஏமாந்த ரசிகர்களுககு விருந்தாக அமைந்தது.

காலி கிளாடியேட்டர்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் மழையின் காரணமாக 5 ஓவர் சூட் ஹவுட் போட்டியாக மாறியது.

நம்ம ஊரில் நாம விளையாடுவது போல அணிக்கு 5 ஓவர் என்றதுமே கொஞ்சம் விறுவிறுப்பாக இருக்கும் என்று நினைத்தோம்.

ஆனால் அன்று ரசல் இந்த போட்டியில அடிச்ச அடிகள் ஒவ்வொன்றும் இடியாக இருந்தது 14 பந்துகளில் 50 ஓட்டங்களை கடந்த அவர் ( இரண்டு பந்துகள் குறைத்து அடித்து இருந்தால் வேகமான 50 ஓட்ட சாதனயை சமப்படுத்தி இருப்பாரு) 19 பந்துகளில் 4 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளை அடித்து 65 ஓட்டங்களை பெற்றது மட்டுமல்ல அணியின் ஓட்ட எண்ணிக்கையை 5 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு கொண்டு சென்றார்.

இதில் வேதனையான விஷயம் என்ன தெரியுமா பாகிஸ்தான் வேகபந்து வீச்சாளரான மொகமட் அமீரக்கு நெருப்பு விழுந்ததை சொல்ல முடியும். அவர் இரண்டு ஓவர்களில் வீசினார் அதில் 46 ஓட்டங்களை அள்ளி கொடுத்ததுடன் மூன்று வைட் பந்துகளையும் வீசி காலி ரசிகர்களை காலி செஞ்சிட்டாரு.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய காலி கிளாடியேட்டர்ஸ் ஆரம்பத்திலே சோர்வோடு தான் களமிறங்கியது. ஆனாலும் தனுஷ் குணதிலக்க வேகமாக ஆடினார்.அவருக்கு ஒழுங்கான பார்டனர் கிடைக்க இல்லை.

எப்படியோ அவர் 15 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகளோடு 30 ஓட்டங்களை பெற்றார் .

போட்டியின் சிறப்பம்சங்கள அன்று ரசல் என்ன சொல்கிறார் என்று பாருங்க.

administrator

Related Articles