அடுத்த வாரம் 2லட்சத்து 49 ஆயிரம் தடுப்பு மருந்துகள் கனடா கைவசம்! எப்படி பகிரலாம் என்பது குறித்து ஆராய்வு!

அடுத்த வாரம் 2லட்சத்து 49 ஆயிரம் தடுப்பு மருந்துகள்  கனடா கைவசம்!  எப்படி பகிரலாம் என்பது குறித்து ஆராய்வு!

கொரோனா தடுப்பு மருந்தான பைசர் தடுப்பு மருந்து அடுத்த வாரம் கனடாவை வந்தடைய இருக்கிறது. முதலில் 2 லட்சத்து 49 ஆயிரம் தடுப்பு மருந்துங்களே நமது கைகளில் கிடைக்கிறது.

இதனை முதலில் கனடா சுகாதார அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். அத்தோடு இதனை எவ்வாறு பிரிப்பது என்பது குறித்து மாகண அரசுகளும் சுகாதார அதிகாரிகளும் ஆராய்வார்கள்

ஆனால் அடுத்த வருடம் எமக்கு தேவையான அளவு தடுப்பு மருந்துகள் வந்தடையும் என கனடா பிரதமர் ஜஸ்டின் டூருடோ கூறுகிறார்.

மேலும் 14 மத்திய நிலையங்கள் ஊடாக அடுத்த வாரம் கைகளில் கிடைக்கும் தடுப்பு மருந்துகள் உடனடியாக வழங்கப்படும். கனேடேயர்களுக்கு வழங்கப்படும் தடுப்பு மருந்து பாதுகாப்பானது மட்டுமல்ல செயற்படுதன்மையை அதிகளவில் கொண்டது என அவர் உறுதியாக கூறினார்.

administrator

Related Articles