” 20 பேர்ச் காணித் தருவோம் ” எங்க சாமி அந்த காணி? முன்னாள் அமைச்சர் திகா கேள்வி!

” 20 பேர்ச் காணித் தருவோம் ” எங்க சாமி அந்த காணி? முன்னாள் அமைச்சர் திகா கேள்வி!

நல்லாட்சியில்தான் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. அந்த பத்திரத்தை வங்கியில் வைத்து கடன்கூட பெறலாம் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்டப்பகுதிகளில்வாழும் மக்களுக்கு எமது ஆட்சியின்போதே 7 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டது. எனினும், இது போதாது,எமது ஆட்சிவந்தால் 20 பேர்ச்சஸ் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சிலர் சூளுரைத்தனர். தற்போது அவர்களின் ஆட்சிவந்துள்ளது. அமைச்சும் கைவசம் இருக்கின்றது. அப்படி இருந்தும் ஏன் அதனை செய்யமுடியாமல் உள்ளது?

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்குமாறு யோசனை மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளது. அது அடிப்படை நாட் சம்பளமா அல்லது எல்லாவற்றையும் சேர்த்த பின்னர் வரும் தொகையா என்பதை அறிவிக்கவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஆயிரம் ரூபா என மட்டும்கூறுவது மக்களை ஏமாற்றும் செயலாகும்.” – என்றார்.

administrator

Related Articles