இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் (ODI) போட்டியிலும் இந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 3 போட்டிகளை கொண்ட ஒநநாள் தொடரை 2-0 என வென்று அசத்தியுள்ளது. கொல்கொத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இடம் பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியை இலங்கையணி வெற்றி கொண்டிருந்த போதிலும் இலங்கையணி அதை சாதகமாக பயன்படுத்த தவறியது. முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி ஆரம்பத்தில் பொறுமையாக துடுப்பெடுத்து […]

முதல் நாளில் உலகளவில் ரூ.26.5 கோடி வசூலித்துள்ள வாரிசு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித்குமார் நடித்த ‘துணிவு’, நடிகர் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய திரைப்படங்கள் நேற்று வெளியானது. ஒரே நாளில் 2 உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியானதால் இருவரது ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். படம் வெளியான தியேட்டர்கள் முன்பு ரசிகர்கள் கட்-அவுட், பேனர் வைத்தும், கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். அஜித், விஜய் படங்களுக்கு எப்போதுமே முதல் நாள் வசூல் என்பது மிகவும் முக்கியமானது. அந்த வகையில் வாரிசு திரைப்படம் முதல் […]

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் …

இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒரு நாள் போட்டி வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் டஸன் 2-வது இடத்திலும், பாகிஸ்தானின் இமாம் உல்-ஹக் 3-வது இடத்திலும் உள்ளனர். இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் விராட் […]

வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிற இந்திய அணி

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. […]

பெண்கள் இனி ஆண் டாக்டர்களைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தலீபான்கள் பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக பெண்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். கல்வி கற்க தடை, உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் கேளிக்கை பூங்காக்களுக்கு செல்ல தடை, ஆண்கள் துணையின்றி பயணிக்க தடை, வேலைக்கு செல்ல தடை என பல்வேறு கட்டுப்பாடுகளால் பெண்கள் நசுக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு சர்வதேச அளவில் […]

அமெரிக்காவில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெடிகுண்டு புயல்

அமெரிக்காவில் கடந்த மாதம் வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெடிகுண்டு புயல் என்று அழைக்கப்படும் சக்தி வாய்ந்த பனிப்புயல் தாக்கியது. இதில் நியூயார்க், கலிபோர்னியா உள்பட 10-க்கும் மேற்பட்ட மாகாணங்கள் கடுமையாக பாதிக்கபட்டன. பனிப்புயல் தொடர்பான சம்பவங்களில் 70-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். மற்ற மாகாணங்களில் பனிப்புயலின் தாக்கம் குறைந்தபோதிலும், கலிபோர்னியா மாகாணத்தில் தொடர்ந்து பனிப்புயல்கள் தாக்கி வருகின்றன. மேலும் அங்கு வரலாறு காணாத அளவுக்கு கனமழையும் பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு நகரங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. இந்த […]

தைவானை சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சீனா தயாரார்

தைவானை ஒரு சீன பிரதேசமாக சீனா கருதுகிறது. தேவை ஏற்பட்டால் படைபலத்தை பயன்படுத்தி தைவானை சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் சீனா தயாராக உள்ளது. இப்படியான சூழலில் தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அண்மை காலமாக தைவானுடன் நட்பு பாராட்டி வருகின்றன. நட்புறவை வலுப்படுத்தும் விதமாக அந்த நாடுகள் தங்களின் பிரதிநிதிகளை தைவானுக்கு அனுப்பி வருகின்றன. இது சீனாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு […]

நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு

வாணியம்பாடி நகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் உறுதிமொழி ஏற்பு வாணியம்பாடி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் மாரி செல்வி தலைமையில் தூய்மை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை நகராட்சி தலைவர் உமா சிவாஜி கணேசன் வழங்கி தொடங்கி வைத்து பேசினார். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் சம்பத், நகர கூட்டுறவு […]

மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவை

மதுரை விமான நிலையத்தில் இருந்து தற்போது இலங்கை, துபாய் உள்ளிட்ட பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் 24 மணி நேர சேவையை தொடங்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது. மதுரை விமான நிலையம் உள்பட 5 விமான நிலையங்களில் 24 மணி நேர சேவைக்கு மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கியுள்ளது. தற்போது மதுரை விமான நிலையத்தில் இரவு 8.40 மணி வரை […]

கூகுள் நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு வருகிற 16-ந் திகதி விசாரணைக்கு

கூகுள் நிறுவனத்தின் இந்திய தொழில் போட்டி ஆணையத்தால் ரூ.1337 கோடி அபராதம் விதிக்கப்பட்ட விவகாரத்தில் மேல்முறையீட்டு மனுவை வருகிற 16-ந் திகதி விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஒப்புக்கொண்டுள்ளது. பல்வேறு சந்தைகளில் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தொடர்பான வர்த்தகத்தில் நேர்மையற்ற வழியில் செயல்பட்டதாக கூகுள் நிறுவனத்துக்கு இந்திய தொழில் போட்டி ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரூ.1,337.76 கோடி அபராதம் விதித்தது. அதற்கு எதிராக கூகுள் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் […]