தேர்தல் ஒன்று தேவையா? இல்லையா?- மத்திய வங்கி (Video)

இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் ஒன்று தேவையா? இல்லையா? என்பது மத்திய வங்கிக்கு சம்பதமில்லா விடயம் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசேகர தெரிவித்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற விசேட ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார். தேர்தல் செவீனம் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியதற்கு, தேர்தலுக்கான செலவீனம் திறைசேரிக்கு சம்பந்தமானது எனவும் தெரிவித்தார். IMFன் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து கடன் வழங்குனர்களிடம் இருந்தும் நிதி உத்தரவாதத்தை மிகக்குறுகிய காலத்தில் பெற்றுக் கொள்ள […]

ஜனித் பெரோ உள்ளிட்ட வீரர்களுக்கு அழைப்பு

கிரிக்கெட் சுற்று தொடருக்காக இலங்கை வந்துள்ள இங்கிலாந்தின் பிராந்திய அணிகளில் ஒன்றான லயன்ஸ் கழக அணியுடனான தொடரில் விளையாட குசல் ஜனித் பெரோ உள்ளிட்ட வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது இலங்கை ஏ அணியில் விளையாடவே குசலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சிறி லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அதன்படி, குசல் ஜனித் பெரேரா, பெத்தும் நிஸாங்க, ச்சரித் ஹசலங்க, ச்சாமிக்க கருணாரத்ன, ஏஞ்சலோ மெத்திவ்ஸ், துனித் வெல்லாலகே, லக்ஷான் சந்தகென், ச்சமிர சமரவிக்ரம, விஷ்வ பெர்னாண்டோ, பிரோமத மதுஷான், […]

குடிநீரைப் பெறுவதற்கு மக்கள் போராட்டம்

மனிதன் உயிர்வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானது. அதேபோல சுகாதார நலனுடன்வாழ நாளாந்தம் குறிப்பிட்டளவு சுத்தமான நீரை கட்டாயம் பருகியாக வேண்டும். எனினும், நீர்வளம்மிக்க மலையகத்தில் சில தோட்டப்பகுதிகளில் குடிநீரைப் பெறுவதற்கு மக்கள் போராட வேண்டியுள்ளது. ஒரு குடம் நீரை நிரப்பிக்கொள்வதற்கு அவர்கள் படும்பாடு ‘வலி சுமந்த கதையாகும். அந்தவகையில்  அக்கரப்பத்தனை பன்சல கொலனி  மக்கள்  ஒரு‌ குடம் நீருக்காக 200 படிகள் ஏறி இறங்கவேண்டியுள்ளது. சிலவேளைகளில் நீர் இல்லாமல் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய அவலமும் ஏற்படுகின்றது. மேற்படி கொலனியில் […]

நுவரெலியாவில் கையெழுத்து போராட்டம்

கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரி நுவரெலியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக நேற்று (24)  கையெழுத்துப் போராட்டம்  முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியாவில்  “கோட்டா கோ கம” கிளை இளைஞர்கள், பல்கலைக்கழக மாணவர்கள்  மற்றும் சில சிவில் அமைப்புகள் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கையொப்பம் இடும் நடவடிக்கையில்  ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா தொகுதி அமைப்பாளர் திணேஷ் கிருசாந்த நுவரெலியா மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சக்தியின் […]

கடும் குளீர் காலநிலை

ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் குளீர் காலநிலை காரணமாக இதுவரை சுமார் 124 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த வாரத்தில் இந்த உயிரழப்புகள் பதிவானதாக ஆப்கான் செய்திகள் தெரிவிகி;கின்றன. இதேவேளை கடும் குளீர் காலநிலை காரணமாக இதுவரை சுமார் 70,000க்கும் மேற்பட்ட கால் நடைகள் உயிரிழந்தூள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் உணவு இல்லாமல் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதலாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

கிறிஸ் ஹிப்கின்ஸ்

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவுச் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெலின்டன் நகரில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நியூசிலாந்து ஆளுநர் முன்னிலையில் கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி 44 வயதான கிறிஸ் ஹிப்கின்ஸ் நியூசிலாந்தின் 41 ஆவது பிரதமராக பதவியேற்றுள்ளார். முன்னாள் பிரதாம் ஜெசிந்தா ஏர்டன் அண்மையில் பதவி துறந்த நிலையிலேயே கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

வயிட் வொஷ்

இந்துரில் நேற்று இரவு இடம்பெற்ற இந்திய – நியூசிலாந்;து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி 90 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியால் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வயிட் வொஷ் செய்து கைப்பற்றியுள்ளது. நேற்றைய போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில் […]