மனிதக் கடத்தலுக்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளுக்கு இத்தாலி ஆதரவு

மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், அதற்கு தேவையான ஹெலிகொப்டர்களை வழங்கவும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா (Rita G. Mannella) விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை இன்று (25) பிற்பகல் சந்தித்த போது இத்தாலிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது, கலாசார நிகழ்ச்சிகளை […]

ஹிருணிகா பிரேமசந்ர

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மூச்சி உளளவரை தேர்தலை பிற்போடவே முயற்சிப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார். ஜனாதிபதி தனது இறுதி துரும்பு சீட்டை பாவித்து தேர்தலை பிற்போடவே முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆகவே மக்கள் பலமே இறுதியில் வெல்லும், எனவே மக்கள் தேர்ல் ஒன்றை கேட்டு போராட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி இந்திய அணி, ஜப்பானுடன்

15-வது உலகக் கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் ஜெர்மனி அணி, இங்கிலாந்தை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. இதைத்தொடர்ந்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் ஜெர்மனி 4-3 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறியது. […]

கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட்

ஆண்களுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கி வெற்றிகரமாக வீறுநடை போட்டு வருகிறது. இதேபோல் பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டி நடத்த வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்களுக்கான முதலாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் மாதம் மும்பையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டிக்கு ‘பெண்கள் பிரிமீயர் லீக்’ என்று நேற்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 5 அணிகள் பங்கேற்கும் என்றும் 10 […]

காவல் நிலையத்தில் சிறுவனுக்கு என்ன வேலை?

உத்தர பிரதேசத்தின் குஷிநகர் மாவட்டத்தில் காசியா பகுதியில் காவல் நிலையம் ஒன்று அமைந்து உள்ளது. இதில் உயரதிகாரியாக பணியாற்றி வருபவர் அசுதோஷ் குமார் திவாரி. நேர்மைக்கும், கண்டிப்புக்கும் பெயர் பெற்றவர். அவர் பணியில் இருந்தபோது, ‘போலீஸ் அங்கிள்’ என ஒரு குரல் கேட்டு உள்ளது. சத்தம் வந்த திசையில் திவாரி திரும்பி பார்த்தபோது சிறுவன் ஒருவன் நின்று உள்ளான். காவல் நிலையத்தில் சிறுவனுக்கு என்ன வேலை? என்ற ஆச்சரியத்தில் யோசித்தபடியே, சிறுவனை அழைத்து விசாரித்து உள்ளார். அந்த […]

நடன பயிற்சி மையத்துக்குள் துப்பாக்கி சூடு

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் மான்டேரி பார்க் நகரில் கடந்த 21-ந் திகதி நடன பயிற்சி மையத்துக்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலியாகினர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த திங்கட்கிழமை கலிபோர்னியா, அயோவா மற்றும் இல்லினாய்ஸ் மாகாணங்களில் அடுத்தடுத்து நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்களால் அமெரிக்காவே அதிர்ந்தது. இந்த நிலையில் வாஷிங்டன் மாகாணம் யாகிமா நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நேற்று […]

ஜனாதிபதி ரணில்

நான்காவது மற்றும் ஐந்தாவது தொழிற்புரட்சிகளில் உள்ள புதிய தொழில் நுட்பத்துடன் கலந்த டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த தேவையான நவீன தொழில்நுட்பத்தை இலங்கையின் கைத்தொழில்களில் அறிமுகம் செய்து நாட்டிலுள்ள கைத்தொழில் கல்வி மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார். 2023ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் இலங்கையில் நடத்தப்படவுள்ள “புதிய டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி” தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (25) பிற்பகல் ஜனாதிபதி ரணில் […]

கரப்பான் பூச்சிகள் சாதாரணமானவை அல்ல

இங்கிலாந்து நாட்டின் லிங்கன் நகரத்தில் உள்ள ராயல் வில்லியம் என்ற உணவு விடுதியில் சமையற்கலை நிபுணராக டோனி வில்லியம்ஸ் வேலை பார்த்து வந்துள்ளார். அந்த உணவு விடுதியின் உரிமையாளருக்கும் சமையற்கலை நிபுணர் வில்லியம்ஸுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதாவது விடுமுறைக்குரிய சம்பளத்தை முதலாளி தனக்கு முறையாக வழங்கவில்லை என்று அந்த உணவு விடுதியின் வேலையை வில்லியம்ஸ் ராஜினாமா செய்துள்ளார். ஆனால், அந்த உணவு விடுதி உரிமையாளரை பழிவாங்கும் நோக்கத்தில் அந்த உணவு விடுதியின் கிச்சனுக்குள் 20 கரப்பான் […]

வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது

பூமத்தியரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும். இது அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும். 26.01.2023 மற்றும் 27.01.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். […]

மலையக தமிழர் பிரச்சினை பற்றியும் பேசாவிட்டால் நாம் ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்?

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனவரி 26 சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளவில்லை. எமது பிரச்சினைகள் பற்றியும் பேசப்படாவிட்டால் எதற்காக நாங்கள் பார்வையாளர்களாக கலந்துக்கொள்ளவேண்டும்?” என்ற கேள்வியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தை தொடர்பில்  அதிருப்தியை வெளியிட்டுள்ளார், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி. இது தொடர்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, “தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை […]