மருந்து தட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குறித்த செய்தியை உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு அனுப்பியுள்ளது. இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே கூறுகையில், இலங்கை எதிர்கொண்டுள்ள மருந்து தட்டுப்பாட்டை நீக்குவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் தலையிடவேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. மருந்துப்பொருட்கள் மற்றும் உபகரணங்கள் தட்டுப்பாடு இலங்கைக்கு பொருட்கள் தொழிநுட்ப உதவிகளை வழங்குவதன் மூலம் மருந்துப்பொருட்கள் உபகரணங்கள் […]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் மைத்திரிபால சிறிசேன

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவலாயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் கால் ஒன்றை இழந்த ஒருவரும், வணக்கத்திற்குரிய சிறில் காமினி ஆண்டகையும் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எச்சரித்து குற்றவாளி கூண்டிற்குள் ஏறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் மைத்திரிபால சிறிசேன பிரதிவாதியாக சேர்க்கப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் முன்னிலையான மைத்திரிபால குற்றவாளி கூண்டிற்குள் ஏமாறாது தவிர்த்தார். இதனையடுத்து அவரை […]

சுவாரஸ்யமான கதைக் களத்தில் அதிரடி திரில்லர் படமாக தயாராகிறது……

இந்தப் படத்தை ஐ.அஹமத் டைரக்டு செய்துள்ளார். சுதன் சுந்தரம், ஜெயராம் தயாரித்துள்ளனர். படம் குறித்து படக்குழுவினர் கூறும்போது, “சுவாரஸ்யமான கதைக் களத்தில் அதிரடி திரில்லர் படமாக தயாராகிறது. உலகம் முழு வதும் உள்ள ரசிகர்களை ஈர்க்கும் கதையம்சத்தில் உருவாகி உள்ளது. திட்டமிட்டபடி படப்பிடிப்பை நடத்தி சரியான நேரத்தில் முடித்துள்ளோம். அஹமதுவின் முந்தைய வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன், ஜனகனமன படங்களை போலவே இதுவும் தனித்துவமான கதைக்களத்தில் இருக்கும்”என்றனர். இந்தப் படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றத்தை நடிகர் […]

கூலிப்படைகள் வாழ்க்கையின் உணர்ச்சிகளை பற்றிய படம்

இதில் ஜாக்கி ஷெராப், சன்னிலியோன், சாரா அர்ஜுன், அர்ஜுன் மல்லிசேரி, ஜெயபிரகாஷ், அக்ஷயா, பிரதீப்குமார், விஷ்னோ வாரியர், சோனல் கில்வானி, கியாரா, சட்டிண்டர், ஷெரின் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். பாலாவிடம் உதவியாளராக பணியாற்றிய விவேக் கே.கண்ணன் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, “இது பணத்துக்காக கொலைகள் செய்யும் கொலைகாரர்கள் பற்றிய உணர்ச்சி மிகுந்த படமாக இருக்கும். அதிரடி படம் கிடையாது. ஆனால் கூலிப்படைகள் வாழ்க்கையின் உணர்ச்சிகளை பற்றியதாக இருக்கும். சென்னை, மும்பை, காஷ்மீர் […]

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலின் திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் அக்சர் பட்டேலின் திருமணம் நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து நடந்துள்ளது.அக்ஷர் படேலும், அவரது தோழியுமான மேகா இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு அக்ஷர் படேலின் 29-வது பிறந்தநாளன்று இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இதைத் தொடர்ந்து நேற்று இரவு குஜராத் மாநிலம் வதோதராவில் வைத்து அக்ஷர் படேல் மற்றும் மேகாவிற்கும் திருமணம் நடந்துள்ளது. இந்த திருமண நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் […]

பரபரப்பான இந்த போட்டியில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்

கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இ்ன்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டாமி பால், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர். பரபரப்பான இந்த போட்டியில் 7-5, 6-1, 6-2 என்ற கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். இதனால் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் நோவக் ஜோகோவிச் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் ஆகியோர் மோதுகின்றனர்  

ஐ.ஜி.எஸ். 7′ என்ற உளவு செயற்கைக்கோளை உருவாக்கிய ஜப்பான்

ஜப்பான் ‘ஐ.ஜி.எஸ். 7’ என்ற உளவு செயற்கைக்கோளை உருவாக்கியது. இந்த ரேடார் செயற்கைக்கோள், மின்காந்த கண்காணிப்பு அமைப்புடன் இரவிலும், கடுமையான வானிலை நிலவுகிற நேரங்களிலும் படங்களைப் பிடிக்கும் என்று கேபிடன் செயற்கைக்கோள் புலனாய்வு மையம் தெரிவித்தது. இந்த ‘ஐ.ஜி.எஸ். 7 ‘ செயற்கைக்கோளை ’46 எச்2ஏ’ ராக்கெட் சுமந்து கொண்டு ககோஷிமா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து நேற்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 10.50 மணிக்கு விண்ணில் சீறிப்பாய்ந்தது. இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட 20 […]

இந்த ஆண்டில் இஸ்ரேலியப் படையால் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் அதிகரிப்பு

பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியாக இரத்தம் சிந்துவது தொடர்வதால் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளுக்கு பாலஸ்தீன அதிகார சபையின் பிரதமர் முகமது ஸ்டய்யே அழைப்பு விடுத்துள்ளார். ஜெனினில் இந்த ஆண்டில் இஸ்ரேலியப் படையால் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. ஜெனினில் உள்ள அகதிகள் முகாமில் நேற்று நடைபெற்ற மோதலில் இஸ்ரேலியப் படையால் பெண் ஒருவர் […]

அதானியின் சொத்து மதிப்பு சரிந்து, ஏழாம் இடத்துக்கு

அதானி குழுமப் பங்குகள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை கடும் சரிவுடன் வர்த்தகமானதைத் தொடர்ந்து அதானியின் சொத்து மதிப்பு சரிந்து, ஏழாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா மற்றும் ஆசியாவின் மிகப் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமப் பங்குகள் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் கௌதம் அதானி 7-ஆம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் பணக்காரர்களின் பட்டியலில், வெள்ளிக்கிழமை காலை பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கியதும், அதானியின் சொத்து […]

பாதுகாப்பு அளிக்கும் வரை நடை பயணத்தை தொடங்கப்போவதில்லை

கன்னியாகுமரியில் கடந்த செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப் பயணம், இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தநிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைப்பயணம் ஜம்மு-காஷ்மீரின் பனிஹாலில் இருந்து மீண்டும் தொடங்கியது. காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உற்சாகமாக மூவர்ணக் கொடியை ஏந்தியபடி நடைப்பயணத்தைத் தொடர்ந்தனர். இந்தநிலையில் காஷ்மீரின் காசிகுண்ட் பகுதியில் நடைபெற்ற ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணம் பாதுகாப்பு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் உரிய பாதுகாப்பு அளிக்கும் வரை நடை பயணத்தை மீண்டும் […]