அவர் ஒரு நல்ல பந்து வீச்சாளர்.” – பேட்ஸ்மேன் முகமது கைப்

நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவுலிங்கில் இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் கடைசி ஓவரில் 27 ரன்களை விட்டுக்கொடுத்தது அணிக்கு […]

அரினா சபலென்கா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா வென்ற முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் , தரவரிசையில் 25-வது இடத்தில் இருப்பவருமான எலினா ரைபகினா (கஜகஸ்தான்), தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா ஆகியோர் மோதினர் . பரபரப்பான இந்த போட்டியில் முதல் சுற்றை எலினா ரைபகினா கைப்பற்றினார் . […]

ராஜா சாரி நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் நிலவுக்குப் பயணிக்கும் விண்வெளி வீரர்

அமெரிக்க விமானப்படையின் பிரிகேடியர் ஜெனரலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீரர் ராஜா சாரியை ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். பிரிகேடியர் ஜெனரல் என்பது அமெரிக்க விமானப்படையின் ஒரு நட்சத்திர ஜெனரல் அதிகாரி பதவி ஆகும். இவரது நியமனத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற செனட்சபை ஒப்புதல் வழங்க வேண்டும். 45 வயதான ராஜா சாரி தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் ‘க்ரூ-3’ என்ற நாசாவின் விண்வெளி திட்டத்திற்கு தலைவராக உள்ளார். அமெரிக்க விமானப்படையில் கர்னலாக […]

ஜனாதிபதி மாளிகையில் உள்ள பூந்தோட்டம் இனி அம்ரித் உதயன்

ஜனாதிபதி மாளிகையை சுற்றிலும் தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் பல்வேறு வகையிலான மரங்கள், பூச்செடிகள், அழகு தாவரங்கள் வளர்க்கப்பட்டு வருகிறது. ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே உள்ள இந்த தோட்டத்தில் வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள் பூத்துக்குலுங்கும் மிகவும் ரம்மியமான காட்சியை அளிக்கும். இந்த தோட்டம் முகலாய தோட்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜனாதிபதி மாளிகையில் உள்ள ‘முகலாய’ தோட்டத்தை ‘அம்ரித் உதயன்’ என்று பெயர் மாற்றம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆண்டு நாடு சுந்திரமடைந்து […]

மறைந்த சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ

தென்னிந்திய திரையுலகின் முன்னணி சண்டை பயிற்சி இயக்குனராக வலம் வந்தவர் ஜூடோ ரத்தினம். 92 வயதான ஜூடோ ரத்தினம் வயது மூப்பு காரணமாக நேற்று முன் தினம் உயிரிழந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேல் சண்டை பயிற்சியாளராக பணியாற்றியுள்ள ஜூடோ ரத்தினம், 2019-ம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றார். மறைந்த சண்டை பயிற்சி இயக்குநர் ஜூடோ ரத்தினத்தின் உடல், அவரது சொந்த ஊரான குடியாத்தத்தில் இன்று நல்லடக்கம் […]

பதவியில் இருந்து விலகுமாறு கொலை மிரட்டல்….

நேற்றிரவு தொலைபேசி மூலம் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான எம்.எம்.மொஹமட்டை பதவியில் இருந்து விலகுமாறு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் இதற்கு முன்னர் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினரான எஸ்.பி.திவாரத்னவுக்கு குறுஞ் செய்தி மூலம் மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட கே.பீ.பீ.பத்திரன மற்றும் திவாரத்ன ஆகிய ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை திணைக்களம் விசாரணைகளை […]

சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகின் ஒரே ஜனாதிபதி

நாட்டின் அரசியலமைப்பை சகோதரனுக்காக மாற்றிய உலகின் ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச இடம்பிடித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்றைய தினம் பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்றிருந்தது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சர்கள் தோல்வியடைவதற்கு குடும்ப ஆட்சி பிரதான காரணமாக அமைந்தது,ஆகவே 2019ஆம் ஆண்டுக்கு பிறகு பாடம் […]

ஊடகவியலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் அவரது வீடு முற்றுகை

நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஊடகவியலாளருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் அவரது வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் – மானிப்பாய் கட்டுடை அரசடி வீதியிலுள்ள ஊடகவியலாளர் எஸ். ஆர். கரனின் வீடே இவ்வாறு நேற்று (27.01.2023) மாலை முற்றுகையிடப்பட்டுள்ளது. குறித்த ஊடகவியலாளரின் வீட்டுக்கு முன்புள்ள வயல் காணியில் எல்லைக்காக போடப்பட்டிருந்த சீமெந்து தூண் நேற்று மாலை உடைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவில் பணியாற்றும் நபராலே குறித்த தூண் உடைக்கப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சுட்டிக் காட்டியுள்ளார். […]

இலங்கை கிரிக்கெட் தலைவர் அணி

இலங்கை வந்துள்ள இங்கிலாந்தின் லயன்ஸ் கழகத்திற்ம், ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் அணிக்கும் இடையிலான இரண்டு நாள் பயிற்சி போட்டியில் 4 விக்கெட்டுகளால் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தலைவர் அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் நிஷான் மதுசங்க மற்றும் லசித் க்ருஸ்புள்ளே ஆகியோர் சதமடித்து அசத்தினர். அவர்களுடன் இலங்கை கிரிக்கெட் தலைவர் அணிக்கு லசித் 116 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை பெற்று கொடுத்தார்.

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார மற்றும் விவசாய வேலைத்திட்டங்கள்

அரசாங்கம் தற்போது முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களை எந்த வகையிலும் சீர்குலைத்தால் நாடு கடந்த மே மற்றும் ஜூன் மாதம் போன்ற நெருக்கடிக்குள் சிக்குவதை தடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார மற்றும் விவசாய வேலைத்திட்டங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின்படி நாடுகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் இவ்வாறு சீர்குலைக்கப்படலாம் என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். அனுராதபுரத்தில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் […]