சிறந்த வீரர் விருதை வென்றார் மெஸ்சி

கடந்த ஆண்டுக்கான பிபாவின் சிறந்த வீரர் விருதுக்கான இறுதிப் போட்டியாளர்களாக மெஸ்சி, கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில், பிபா சிறந்த கால்பந்து வீரர் மற்றும் வீராங்கனைகளின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 2022ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான விருது அர்ஜென்டினாவின் மெஸ்சிக்கும், சிறந்த வீராங்கனை விருது ஸ்பெயினின் அலெக்சியா புடெல்லாசுக்கும் வழங்கப்பட்டது.

வங்கிக் கட்டமைப்பு செயலிழக்கவில்லை (Photos)

தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாளையும் (01) சேவைகளை வழங்கத் தயாராக இருப்பதாக மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஆதரிவளிப்பதற்காக அனைத்து அரச ஊழியர்கள் மற்றும் வங்கி ஊழியர்களும் தங்கள் பொறுப்பை நிறைவேற்றுவார்கள் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். வங்கித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் […]

இங்கிலாந்துக்கு, மலையக தமிழர் தொடர்பில் தார்மீக கடமை  இருக்கின்றது

“மலையக தமிழரின் பிரதான எதிர்பார்ப்பு இந்நாட்டின் தேசிய நீரோட்ட அரசியல் வரைபுக்கு உள்ளே முழுமையான பிரஜைகளாக வேண்டும் என்பதாகும். சட்டப்படி நாடற்றோர் இன்று இல்லை. எல்லோருமே பிரஜைகள். ஆனால், நமது மக்கள் முழுமையான பிரஜைகள் இல்லை. எமது பாதை உள்நோக்கிய பாதை. பிரிட்டன் இலங்கை அரசுடனான தமது நல்லுறவுகளை பயன்படுத்தி எமது இந்த இலங்கை கனவை நனவாக்க உதவ வேண்டும்.” என நேற்று கொழும்பில், வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் நிகழ்ந்த சந்திப்பின் போது, பிரித்தானிய வெளிவிவகார துணை பணிப்பாளர் மாயா […]

அமெரிக்கத் தூதுவர்…

இலங்கை எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை வெற்றிகொள்வதற்கு, வளமான இந்திய – பசுபிக் பிராந்தியத்தை கட்டியெழுப்புவது முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட “இந்திய – பசிபிக் பிராந்தியத்திற்கான பொதுவான பார்வை: தெற்காசியாவிற்கான தாக்கங்கள்” என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா இலங்கைக்கான அமெரிக்கத் […]

கட்சி ஆதரவாளர்களை வைத்து போராட்டகாரர்களை தாக்கினார்கள்

போராட்டத்தில் உயிர் நீத்த போராளியின் உயிருக்கு பதில் கூற வேண்டியதும் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேணடியதும் இந்த அரசாங்கமும் ஜனாதிபதியுமே அன்று கட்சி ஆதரவாளர்களை வைத்து போராட்டகாரர்களை தாக்கினார்கள். இன்று காவல் துறையை வைத்து தாக்குகின்றார்கள். இதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகமா? என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மக்கள் எதிர்ப்பு […]

அமைச்சரவை அங்கீகாரம்

நேற்று(27) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு… 01. பங்களாதேசத்துடனான உத்தேச முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் பிராந்திய ரீதியாக பிரதான வணிகத் தரப்பினர்களுடன் நிலவுகின்ற தொடர்புகளைப் பலப்படுத்துவதன் மூலம் சந்தைத் தடைகளை நீக்கி இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு சந்தை அணுகலுக்கான வாய்ப்புக்களை அதிகரித்தல், உள்ளூர் விநியோகம் தொடர்பாக காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வுகளாக முதலீடுகளைக் கவர்ந்திழுத்தல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களை மேலும் அதிகரித்தல் போன்ற நோக்கங்களை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு இணையாக இலங்கை மற்றும் பங்களாதேசத்திற்கும் இடையில் முன்னுரிமை […]

பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி

பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி அட்மிரல் முஹம்மட் அம்ஜத் கான் நியாஸி (Muhammad Amjad Khan Niazi) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார். இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடல்சார் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் நடவடிக்கைகளை பரந்தளவில் மேலும் மேம்படுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பை அடையாளப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் கடற்படைப் பிரதானி , ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசு ஒன்றையும் வழங்கினார். பாகிஸ்தான் மற்றும் இலங்கை கடற்படைப் […]

நியூசிலாந்து திரில் வெற்றி (திரில் காணொளி)

வெலிங்டனில் இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 1 ஓட்டத்தால் திரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றி மூலம் டெஸ்ட் தொடர் 1-1 என்ற நிலையில் சமனில் முடிந்தது. முதல் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆண்டர்சனை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் வாக்னர் அவுட் ஆக்கினார். இங்கிலாந்து அணி 74.2 ஓவரில் 256 ரன்னுக்கு ஆ(A)ல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து ஒரு […]

‘மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்த வேண்டாம்’

பிரான்சில் தலைநகர் பாரீஸ் உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராடினா். குறிப்பாக பாரீசில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதி பேரணி நடத்தினர். அவர்கள் பிரான்ஸ் மற்றும் உக்ரைன் தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியும், ‘போர் வேண்டாம், அமைதி வேண்டும்’, ‘மூன்றாம் உலகப்போரை ஏற்படுத்த வேண்டாம்’ ‘நேட்டோவை விட்டு வெளியேறு’ போன்ற வாசகங்கள் அடங்கி பதாகைகளை சுமந்தபடியும் பேரணியாகச் சென்றனர்.

டுவிட்டரில் பணி நீக்கம்…

டுவிட்டரில் இருந்து மேலும் 200 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளர். அதாவது தனது மொத்த ஊழியர்களில் 10 சதவீதம் பேரை டுவிட்டர் பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் டுவிட்டர் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 1,800 ஆக குறைந்துள்ளது.