தேசிய விளையாட்டுக் சபை தலைவர்

விளையாட்டு கழகங்களில் பதவிகள் பாராது புதிய சட்டத் திட்டங்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய விளையாட்டுக் சபை தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலே அவர் இதனை கூறினார். உதாரணமாக எந்தவெரு விளையாட்டு கழகத்திலும் தலைவர் பதவியை இருமுறை அதாவது 4 வருடங்கள் வகிக்க இயலுமான வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Sri lanka கிரிக்கட்

ணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை கிடைக்கப்பெறும் வரை இலங்கை கிரிக்கட் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் மேன்முறையீட்டு நீதிமன்றில் உறுதியளித்துள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பிரதானிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன தலைமையிலான விசாரணைக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை ரத்து செய்யும் உத்தரவை தடுக்கும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சருக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு […]

பங்களாதேஷூக்கு IMF முதலாவது கடன்

இலங்கைக்கு பின்னர் அலுவலக மட்ட இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொண்ட பங்களாதேஷூக்கு சர்வதேச நாணய நிதியம் முதலாவது கடன் தவணையை இன்று விடுவித்தது. இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் அலுவலக மட்ட இணக்கப்பாட்டினை ஏற்படுத்திக்கொண்டது. பங்களாதேஷ் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் திகதி IMF-உடன் அந்த இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. பங்களாதேஷூக்கு 4.7 பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு நிறைவேற்றுக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக  சர்வதேச நாணய நிதியம் இன்று அறிவித்தது. அதன் முதலாவது தவணையாக […]

ஓ2, கனெக்ட் படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம்

நயன்தாரா, ஜெயம் ரவி ஜோடியாக இறைவன், இந்தியில் ஷாருக்கானுடன் ஜவான் படங்களில் நடித்து வருகிறார். மேலும் 2 புதிய படங்களில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நயன்தாரா திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த வருடம் அவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல், ஓ2, கனெக்ட், மலையாளத்தில் கோல்டு, தெலுங்கில் காட் பாதர் ஆகிய 5 படங்கள் வந்தன. ஓ2, கனெக்ட் படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையம்சம் கொண்டவை. தற்போது […]

மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிட முடியாது

இன்று (01) முதல் மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிட முடியாது என மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி வழமை போன்று மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு நீர் மாத்திரம் வழங்கப்படும் என மகாவலி அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். மின் உற்பத்திக்காக மின் உற்பத்தி நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களிலிருந்து மேலதிக நீரை விடுவிப்பது தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அண்மையில் விடுத்த கோரிக்கைக்கு அமைய கடந்த இரு தினங்கள் மேலதிக நீர் […]

விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் படம்

வாரிசு’ படத்தைத் தொடர்ந்து விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணையும் படம் இது என்பதால், இப்படத்திற்கு கோலிவுட் வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். தளபதி 67 படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இதுதவிர […]

இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் போட்டிக்காக பெங்களூருவில் பயிற்சி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் சொந்த மண்ணில் விளையாடி வருகிறது. இன்றுடன் நியூசிலாந்து தொடர் முடிவடைகிறது. 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி ‘ஒயிட் வாஷ்’ செய்தது. மூன்று 20 ஓவர் போட்டியில் இதுவரை நடந்த 2 ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒன்றில் வெற்றி பெற்றுள்ளன. 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் ஆட்டம் அகமதாபாத்தில் இன்று நடக்கிறது. அடுத்து ஆஸ்திரேலிய அணி இந்தியா வருகிறது. 4 […]

வரும் ஏப்ரலில் தொடங்குகிற ஐபிஎல் 16-வது சீசன்

ஐபிஎல் 16-வது சீசன் வரும் ஏப்ரலில் தொடங்குகிறது. . இதற்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை . ஆனால் ஏப்ரலில் தொடங்கி மே மாதம் வரை நடக்கும். இதுவரை 4 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கே அணி, 5வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. அதிகமுறை ஃபைனலுக்கு முன்னேறிய, 2 சீசன்களை தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃபிற்கு முன்னேறிய ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் எம்எஸ் […]

மகிழ்ச்சியில் திளைத்துப்போன ஹெனன் மைன் நிறுவனம்

கொரோனா நெருக்கடியால் சீனாவின் பொருளாதாரம் சரிந்து வரும் அதே வேளையில் ஹெனன் மைன் நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டில் மட்டும் 23 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. கடந்த ஆண்டின் இறுதியில் அந்த நிறுவனத்தின் மொத்த வருவாய் 9.16 பில்லியன் யுவான் (சுமார் ரூ.11 ஆயிரத்து 86 கோடி) ஆக இருந்தது. இதனால் மகிழ்ச்சியில் திளைத்துப்போன நிறுவனம் தனது ஊழியர்களையும் மகிழ்விக்க முடிவு செய்து, அதற்கான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணம் ஹெம்ப்ஸ் டெட்நகரில் உள்ள லிடோ […]

ஜி 20 மாநாடு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு விருந்தினர்கள்

சென்னையில் நடைபெறும் ஜி 20 மாநாடு கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வெளிநாட்டு விருந்தினர்கள், பிரதிநிதிகள் இன்று (புதன்கிழமை) மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை சுற்றி பார்த்து, கண்டுகளிக்க வருகை தருகின்றனர். நேற்று மாமல்லபுரம் கடற்கரை கோவில் உள்ளிட்ட புராதன பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், மோப்ப நாய்கள் மூலமும் கற்சிற்பங்கள் உள்ள பகுதிகளில் அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தனர். அதேபோல் வெடிகுண்டு […]