ஒருநாள் போட்டி

தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிம்பர்லியில் நேற்று பகல்-இரவாக நடந்தது. முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன் குவித்தது. மலான் 114 பந்தில் 118 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்), பட்லர் 127 பந்தில் 131 ரன்னும் 16 பவுண்டரி, 7 சிக்சர், மொய்ன் அலி 23 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். நிகிடி […]

11 தூதுவர்களும் 6 உயர்ஸ்தானிகர்களும்

இலங்கைக்கென புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 11 தூதுவர்களும் 6 உயர்ஸ்தானிகர்களும் இன்று (02) பிற்பகல் கண்டியிலுள்ள ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நாற்சான்றிதழ்களை கையளித்தனர். ஐவரி கோஸ்ட், உருகுவே, மொங்கோலியா, சர்பியா, சூடான், ஆமேனியா, வட மசடோனியா, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு, சுவீடன் மற்றும் எக்குவடோர் ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் கனடா, மலேசியா, மாலைதீவு, ஜமைக்கா, தன்சானியா, மலாவி ஆகிய நாடுகளுக்கான உயர்ஸ்தானிகர்களுமே இவ்வாறு புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தொடர்பான பெயர் விவரங்கள் கீழ்வருமாறு- 1. […]

சுசந்திகா

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். பெண்கள் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் அவர் இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.

சுமார் 109 ஏக்கர் காணி நாளை உரிமையாளர்களிடம் கையளிக்கப்படுகிறது

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் யுத்தத்தின் போது பாதுகாப்புப் படையினர் வசமிருந்த சுமார் 109 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு, நாளை (பெப்ரவரி 03 ஆம் திகதி) 197 குடும்பங்களிடம் கையளிக்கப்படவுள்ளது. இராணுவத்தினர் வசமிருந்த ஐந்து காணிகளும் கடற்படையினர் வசமிருந்த ஒரு காணியுமே இவ்வாறு மக்களிடம் கையளிக்கப்பட உள்ளன. இம்மாதம் பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கையின் 75ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை உரிமையாளர்களிடம் கையளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வழங்கிய […]

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு – ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு சர்வதேச சமூகம் இலங்கையை வலியுறுத்தியுள்ளது. 13ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியா மீண்டும் இலங்கையிடம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை குறித்த நான்காம் அகில கால மீளாய்வின் போது இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை குறித்த அறிக்கை நாளைய தினம் ஜெனீவா நேரப்படி மாலை 4.30 மணிக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. சட்டவிரோத ஆட்கடத்தல் தடுப்பு, கோவிட் […]

தமிழ் நாட்டிற்கு ஏமாற்றம்

மத்திய பட்ஜெட் அறிவிப்பு குறித்து தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலேயே உள்ளது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள 2023-24-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்த விதத் திட்ட அறிவிப்பும் இன்றி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. […]

சன் லூஸ் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது ஹர்மன்பிரீத் கவுர் இந்திய அணி

தென்ஆப்பிரிக்கா, இந்தியா, வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 3 நாடுகள் பங்கேற்றுள்ள பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஈஸ்ட் லண்டனில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் இறுதிஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, சன் லூஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.  

 இந்திய Budject

இந்திய பாராளுமன்ற வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடர் ஜனாதிபதி திரௌபதி முர்முவின் உரையுடன் நேற்று (01) ஆரம்பமானது. இதை தொடர்ந்து மக்களவையில் வரவு செலவுத் திட்டத்தை  நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். மத்திய அரசின் சாதனைகள் மற்றும் துறை சார்ந்த செயற்பாடுகளை முதலில் பட்டியலிட்ட நிதி அமைச்சர், துறைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அறிவித்தார். இந்த வரவு செலவுத் திட்டம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த […]

2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கரண் ஷிண்டே

இந்தூரில் நடைபெறும் நடப்பு சாம்பியன் மத்தியபிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆந்திரா முதல் நாளில் 2 விக்கெட்டுக்கு 262 ரன்கள் எடுத்து இருந்தது. ரிக்கி புய் 115 ரன்னுடனும், கரண் ஷிண்டே 83 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 2-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கரண் ஷிண்டே 110 ரன்னிலும், ரிக்கி புய் 149 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள். அதன் பிறகு வந்தவர்கள் தாக்குப்பிடிக்கவில்லை. இதனையடுத்து ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 379 […]

விடுவிக்கப்படவுள்ளன இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள்

பொது மக்களுக்கு சொந்தமான 108 ஏக்கர் காணிகள் நாளைய தினம் (03.02.2023) இராணுவத்தினரால், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரிடம் காணி பத்திரங்கள் வழங்கி விடுவிக்கப்படவுள்ளன. யாழ். வலி – வடக்கு பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய விடுவிக்கப்படவுள்ளன. பல்லாண்டு காலமாக இராணுவத்தின் வசமிருந்த குறித்த காணிகளை 2019ஆம் ஆண்டு விடுவிப்பதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே இந்த காணிகள் விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் காணி விடுவிப்பு நிகழ்வில் யாழ். மாவட்டத்தை […]