LPL-ஐ – ஜாலி

2023 ஆம் ஆண்டுக்கான LPL போட்டியை ஜூலை 31 முதல் ஓகஸ்ட் 22 வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. 5 அணிகள் பங்குபற்றும் இந்த போட்டியில் ஒவ்வொரு அணிக்கும் 20 வீரர்கள் உள்ளடக்கப்படுவார்கள் என  ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல்…?

எதிர்வரும் டிசெம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அபயராம விகாரையில் இன்று(27) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பும் போது, ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எந்தவொரு தேர்தலுக்கும் தமது அணி தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கை

றோயல் பேங்க் ஆப் கனடா வாடகை வீடுகள் தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டளவில் கனடாவில் வாடகை வீடுகளுக்கான தட்டுப்பாடு பெருமளவில் அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடகை வீடுகளுக்கான தட்டுப்பாடை வரையறுக்க வேண்டுமானால் 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 332000 வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அதாவது ஆண்டுதோறும் வீட்டு நிர்வாணப் பணிகளை 20% அதிகரிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 70 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு இருந்தன வீட்டு வாடகைத் தொகை […]

டிக் டாக் செயலி மீதான தடையினால் தமது பிள்ளைகள் அதிருப்தி

கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உலகின் முன்னணி சமூக ஊடக செயலிகளில் ஒன்றான டிக் டாக் செயலி மீதான தடையினால் தமது பிள்ளைகள் அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமது பிள்ளைகள் டிக் டாக் பயன்படுத்துவது இல்லை என கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார். அரசாங்க சாதனங்களில் டிக் டாக் பயன்படுத்துவது அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளது. கனடாவின் மத்திய அரசாங்கம் இந்த தடையை அறிவித்துள்ளது. இதன்படி தமது பிள்ளைகளினாலும் கூட டிக் டாக் செயலியை பயன்படுத்த முடியவில்லை என பிரதமர் ட்ரூடொ […]

பிரித்தானியாவில் கனேடியர் ஒருவரின் நிலை

பிரித்தானியாவுக்கு விடுமுறைக்காக வந்த கனேடியர் ஒருவர் கொள்ளையர்கள் சிலரால் கொடூரமாக தாக்கப்பட்டார். கிட்டத்தட்ட செத்துப் பிழைத்த அவருக்கு 65 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் அறுவை சிகிச்சை செய்யவேண்டியுள்ளதாக அவரது காதலி தெரிவித்துள்ளார். 2018ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 3ஆம் திகதி, கனடாவின் ரொரன்றோவைச் சேர்ந்த Ben Finlan, விடுமுறையைக் கொண்டாடுவதற்காக இங்கிலாந்திலுள்ள லண்டனுக்கு வந்திருந்தார். அப்போது, மதுபான விடுதி ஒன்றின் முன் அவர் சில கொள்ளையர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். அந்த பயங்கர தாக்குதலில், Benஉடைய […]

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லை

சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைக் கலைப்பதற்கான எவ்வித ஏற்பாடுகளும் அரசாங்கத்திடம் இல்லையென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். 2015 ஆம் ஆண்டு அமைச்சரவை பத்திரத்திற்கமைய சிவில் பாதுகாப்பு சேவை, (Depreciating service) காலாவதியாகும் சேவையாக அங்கீகரிக்கப்பட்ட போதிலும், அதன் காலம் நிறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அதன் பிரகாரம், சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களுக்கு 60 வருட சேவைக்காலத்தை பூர்த்தி செய்வதற்கு, 55 வருடங்களில் சேவைக்கால நீடிப்பைக் கோர […]

ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையில் போட்டி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வல்லரசு நாடுகளுக்கு இடையிலான போட்டிகள் அல்லது முரண்பாடுகள் காரணமாக இலங்கை, இந்திய சந்தைக்கு நுழைய அல்லது ஆபிரிக்க சந்தையை திறப்பதற்கு தடையாக இருக்க கூடாதென தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளுக்கு இடையில் அண்மையில் ஏற்படுத்தப்பட்ட ஆர்கஸ் உடன்படிக்கை சீனாவிற்கும் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான போட்டியை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நேர்காணல் ஒன்றிலேயே ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டதாக ஜனாதிபதி […]

2 விமானங்களும் ஒரே நேரத்தில் ரேடாரின் பார்வையில்

நடுவானில் மோதிக் கொள்ள விருந்த நிலையில், ஏர் இந்தியா விமானமும் நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றும் தானியங்கி எச்சரிக்கை அமைப்பால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.   கடந்த வெள்ளிக்கிழமை காலை மலேசியாவிலிருந்து நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தலைநகர் காத்மாண்டு நோக்கி வந்து கொண்டிருந்தது. அதே நேரத்தில் டெல்லியிலிருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்றும் காத்மாண்டு நோக்கி வந்துள்ளது. இந்நிலையில் ஏர் இந்தியா விமானம் 19 ஆயிரம் அடி உயரத்திலும் நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் 15 ஆயிரம் […]

வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்கள்

ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களுக்கான 60 பில்லியன் டொலர் (6000 கோடி டொலர்) பணம் நாட்டிற்கு வரவில்லை என தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின் ஆதரவோடு வெளிநாடுகளில் உள்ள கோடீஸ்வர வர்த்தகர்கள் அதை பதுக்கி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஆட்சியாளர்கள் அவர்களது நெருங்கியவர்களின் துணையோடு வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள டொலர்களே எமது நாட்டின் டொலர் தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய […]

2,000 ஆண்டுகளுக்கு முன் பதப்படுத்தப்பட்ட தலைகள் கண்டு பிடிப்பு

2,000 ஆண்டுகளுக்கு முன் எகிப்தில், பதப்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான ஆட்டு கிடாய்களின் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிறிஸ்து பிறப்பதற்கு ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன் எகிப்தை ஆண்ட இரண்டாம் ராமேசஸ் மன்னருக்காக அபிடோஸ் நகரில் கட்டியெழுப்பப்பட்ட கோயிலில் நடைபெற்ற அகழ்வாய்வின்போது 2,000 ஆட்டு கிடாய்களின் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்போது மன்னர் இரண்டாம் ராமேசஸின் மறைவுக்கு பின்னரும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, கிடாய்கள், நாய்கள், மான்கள், மாடுகள் போன்றவற்றின் பதப்படுத்தப்பட்ட உடல்களை மக்கள் காணிக்கையாக படைத்து வந்துள்ளனர்.