தோட்ட பகுதிகளுக்கும் நிவாரணங்கள் வேண்டும்

நிவாரணம் வழங்கலில் பாராபட்சம் காட்ட வேண்டாம். மலையக தோட்ட பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். “நாட்டின் பொருளாதார நிலையிலே சிறியதொரு மேம்பாட்டை காணமுடிகின்றது. எனினும், கடந்த இரண்டு – மூன்றாண்டு கால பகுதியில் ஏற்பட்ட பின்னடைவு உடனடியாக மாற்றமடையப்போவதில்லை. சந்தையில் பொருட்கள் கிடைக்கப்பெற்றாலும் அவற்றின் விலைகள் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையிலேயே […]

ஐ ஜாலி – இன்று IPL

16வது IPL கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7.30க்கு தொடங்குகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும் (GT), முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும் (CSK) மோதுகின்றன. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று போட்டி தொடங்கும் முன் பிரமாண்டமான ஆடல் , பாடலுடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இதுவரை நடந்த ஐ.பி.எல். தொடரில் மும்பை […]

ட்ரம்பிற்கு எதிராக குற்றவியல் வழக்கு?

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நியூயோர்க் நீதி மன்றம் ஒன்றினால் அவருக்கு எதிராக இந்த குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதன்படி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த முதல் அமெரிக்க ஜனாதிபதி இவர் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. 2016 தேர்தலுக்கு முன்னர் தனது தனிப்பட்ட வழக்கறிஞர் மூலம் ஆபாச திரைப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமெரிக்க […]

“இதுவே கடைசி சந்தர்ப்பம்”

இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே கடைசி சந்தர்ப்பம் எனவும், பரஸ்பரம் குற்றம் சுமத்தாமல் அடுத்த தலைமுறைக்கு சுபீட்சமான சமூகத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற “IMF மற்றும் அதற்கு அப்பால்” கலந்துரையாடலில் பிரதான உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரி கலந்துரையாடலில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச […]

மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி…

தலைசிறந்த அரசியல்வாதியும், இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சரவை அமைச்சருமான, மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இறுதி அஞ்சலி செலுத்தினார். இன்று, அவரது பூதவுடல் தாங்கிய விஷேட வாகனம், பொலிஸ் வாகன தொடரணியுடன் பாராளுமன்ற வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயில் அருகே பூதவுடல் கொண்டு வரப்பட்ட பின்னர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் செங்கம்பளத்தின் ஊடாக பாராளுமன்ற […]

பணி அனுமதிப்பத்திரம் உடைய வெளிநாட்டவர்கள் சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும்

கனடாவில் சொத்து கொள்வனவு செய்வதற்காக காத்திருக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு ஓர் மகிழ்ச்சியாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கனடாவில் பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்ட அல்லது பணி அனுமதிப்பத்திரம் உடைய வெளிநாட்டவர்கள் சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடியர் அல்லாதவர்களும் சொத்துக்களை கொள்வனவு செய்ய முடியும் சொத்து ஒன்றை கொள்வனவு செய்ய வேண்டுமாயின் அவ்வாறானவர்களின் பணி அனுமதிப்பத்திரம் காலாவதியாக குறைந்தபட்சம் 183 நாட்கள் மீதமிருக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. கனேடியர் அல்லாதவர்கள், வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்களினாலும் சொத்துக்களை கொள்வனவு செய்ய […]

Roxham Road மூடப்பட்டதால் வேறு விதமான அபாயங்களை உருவாகும்…

கனடாவும் அமெரிக்காவும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பில் செய்துகொண்ட ஒரு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, கனடா அமெரிக்க எல்லையிலுள்ள, புலம்பெயர்வோர் எல்லையைக் கடக்க பயன்படுத்தும் Roxham Road என்னும் பகுதி மூடப்பட்டது. இது வேறு விதமான அபாயங்களை உருவாக்கும் என அப்போதே புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்புகள் எச்சரித்திருந்தன. இந்நிலையில், Roxham Road மூடப்பட்டதால், வேறொரு பகுதி வழியாக மக்கள் கனடாவுக்குள் நுழைவது தெரியவந்துள்ளதாக புலம்பெயர்வோர் ஆதரவு அமைப்பு ஒன்றைச் சேர்ந்த Franz André என்பவர் தெரிவித்துள்ளார். கனடா அமெரிக்க எல்லையின் இரண்டு […]

பாகிஸ்தானின் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கோதுமை மாவு

ரமழான் நோன்பு கடைப்பிடித்துவரும் பாகிஸ்தானின் ஏழை மக்களுக்கு இலவசமாகக் கோதுமை மாவு வழங்கப்பட்டபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் பல மடங்கு அதிகரித்துள்ளன. தற்போது ரமழான் நோன்பு கடைபிடிக்கப்படு வருவதால் ஏழை மக்களுக்கு இலவசமாக தலா 10 கிலோ கிராம் கோதுமை மாவு வழங்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இந்த நிலையில், அண்மையில் பெஷாவர் நகரில் இலவச […]

பிலிப்பைன்சில் கப்பலில் தீ – 12 பயணிகள் பலி

பிலிப்பைன்ஸில் பயணிகள் கப்பல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காணாமல் போயுள்ளனர். பிலிப்பைன்ஸின் தெற்கில் பசிலன் (Basilan) எனும் பகுதியில்  250 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த கப்பலில் நள்ளிரவில் தீ பரவியுள்ளது. இதன்போது, கப்பலில் இருந்த பயணிகள் பலர் நீரில் குதித்துள்ளனர். கடலோர காவல் படையினரும் மீனவர்களும் இணைந்து அவர்களை மீட்டுள்ளனர். எனினும், 31 பேர் உயிரிழந்துள்ளதுடன், 7 பேரை காணவில்லை. காயமடைந்த 23 பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் […]

உலகின் சிறந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் இலங்கை விஞ்ஞானி ஒருவர் தெரிவு

உலகின் சிறந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, (நோய் எதிர்ப்பு நிபுணர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த ஆறு இளம் விஞ்ஞானிகளில் ஐவர் பிரித்தானிய பிரஜைகள் என்பதுடன் அவர்களில் இலங்கை விஞ்ஞானி ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை விசேட அம்சமாகும். பிரிட்டிஷ் சொசைட்டி ஆஃப் இம்யூனாலஜிஸ்டுகளால் உலகின் ஆறு இளம் விஞ்ஞானிகளில். சந்திம ஜீவந்தர தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நோயெதிர்ப்பு அறிவியலின் எதிர்காலத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட விஞ்ஞானிகளை அங்கீகரிப்பதற்காக நடைபெறும் […]