3,000 மாணவ மாணவியருக்கு ஜனாதிபதி புலமைப்பிரிசில்….(Photos)

ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் – 2023 நிகழ்வு இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான மேற்படி திட்டத்தினை ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன. அதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் க.பொ.த சதாரண தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 2024 ஆம் ஆண்டில் […]

14 வயது மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 மாணவர்கள் உட்பட 9 பேர் பலி

14 வயதுடைய செர்பிய மாணவர் ஒருவர் பள்ளிக்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 8 மாணவர்களும் பாடசாலை காவலரும் கொல்லப்பட்டனர். செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மாணவன் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளார். மேலும் 6 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரும் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

நவீன தொழில்நுட்ப கண்காட்சி

கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியின் 20வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நவீன தொழில்நுட்ப கண்காட்சி இன்று (03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர், ஆசிரியர்களின் வழிகாட்டலின் ஊடாக பாடசாலை மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “மெய்நிகர்” என்ற தொனிப்பொருளிலான கண்காட்சி, கல்லூரியில் ஆரம்பமாகியது. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துக் கொண்டு இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். இன்றும், நாளையும் நடைபெறுகின்ற இந்தக் கண்காட்சயில், […]

பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் தோட்டாக்களை வீசிய நபர்

இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹாம் அரண்மனை வாசல் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நேற்று மாலை நபர் ஒருவர் சுற்றி திரிந்து உள்ளார். அவரிடம் பை ஒன்றும் இருந்து உள்ளது. திடீரென அவர் பையில் இருந்த நிறைய பொருட்களை தூக்கி, அரண்மனைக்குள் வீசியுள்ளார். அவற்றில் துப்பாக்கி தோட்டாக்களையும் வீசி எறிந்து உள்ளார் என சந்தேகிக்கப்படுகிறது. அவரை பெருநகர போலீசார் சுற்றி வளைத்து, கைது செய்தனர். அவரிடம் இருந்த கத்தி ஒன்றையும் பறிமுதல் செய்து உள்ளனர். வேறு ஏதேனும் ஆயுதங்களை மறைத்து […]

சட்ட விரோத சுரங்கத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஏராளமான தங்க சுரங்கங்கள் உள்ளன. பிரேசிலின் ரோரைமா மாகாணத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்கங்கள் செயல்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சிலர் சுரங்க தொழிலில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அப்போது, அவர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பொலிஸார் துப்பாக்கியால் சுட்டதில் 4 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 13பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. இதனால், பிரேசில் நாட்டின் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா […]

நாம் உயிரிழக்கும் போது என்ன நடக்கும் -விஞ்ஞானிகள் ஆய்வு

நாம் உயிரிழக்கும் போது என்ன நடக்கும் என்பது பெரிய மர்மமாகவே இருந்து வருகிறது. உயிரிழந்த பிறகு என்ன ஆகும் என்பதற்கு ஒவ்வொரு மதங்களிலும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது. அதைத் தவிர உயிரிழக்கும் சமயத்தில் நமக்கு என்ன நடக்கும், அப்போது நமது உடலிலும் மூளையில் என்ன நடக்கும் என்பது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. இதைக் கண்டறிய நரம்பியல் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். உயிர் பிரியும் நேரத்தில் இருந்தவர்களின் மூளையில் என்ன நடந்தது, அது எப்படி மரணத்திற்கு […]

உக்ரைனில் தனித்தனி விழாக்களில் கௌரவிக்கப்பட உள்ள கனேடியர்கள்

ரஷ்யாவுக்கு எதிராக உக்ரேனில் களமிறங்கிய இரு கனேடியர்கள் கடந்த வாரம் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரது வீரத்தையும் உக்ரேனிய ராணுவத்தினர் பெரிதும் பாராட்டியுள்ளனர். ஒன்ராறியோவின் St. Catharines பகுதியை சேர்ந்த 21 வயது Cole Zelenco மற்றும் கல்கரி பகுதியை சேர்ந்த 27 வயது Kyle Porter ஆகியோரே உக்ரைனின் பக்முத் பகுதியில் கொல்லப்பட்டவர்கள். உக்ரைனின் பக்முத் பகுதியில் பல வாரமாக நடந்துவரும் சண்டையில், ரஷ்யாவின் தொடர் தாக்குதலில் சிக்கி கனேடியர்கள் இருவரும் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். நெருங்கிய […]

2.87 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசு வென்றவர்…..?

கனடாவில் பரிசிலுப்பு ஒன்றில் சுமார் மூன்று மில்லியன் டொலர் பரிசு வென்றவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். பிரபல விளையாட்டுக் கழகங்களில் ஒன்றான புளு ஜேய்ஸ் கழகத்தின் பரிசிலுப்பில் இவ்வாறு நபர் ஒருவர் 2.87 மில்லியன் டொலர் ஜாக்பொட் பரிசு வென்றெடுத்துள்ளார். ஏப்ரல் மாதத்திற்கான 50/50 பரிசு சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது. Jays Care Foundation அமைப்பினால் இந்த சீட்டிலுப்பு நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்த சீட்டு கொள்வனவு செய்யப்பட்ட இடத்தில் பதிவு செய்யப்படாத காரணத்தினால் யார் […]

முதலீட்டாளர்களுக்கு வசதியாக 07 செயலணிகள்

நாட்டில் “வர்த்தக நட்பு சூழலை” உருவாக்கும் நோக்குடன், ஏழு செயலணிகளின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வசதியாக சேவைகளை வழங்கும் 54 நிறுவனங்களை நிறுவ ஜனாதிபதி அலுவலகம் திட்டமிட்டுள்ளது. முதலீடுகளின் செயல்திறனை அதிகரிக்கவும், அதற்குத் செலவிடப்படும் நேரத்தைக் குறைக்கவும், தேவையான தகவல்களை எளிதாகப் பெறுவதற்கான வாய்ப்பையும் இது எளிதாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, செயலணிகளுக்கு முறையான பொறுப்புகள் வழங்கப்படுவதோடு அதற்கான நிலையான முறைமைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வர்த்தகப் பிரவேசத்தை இலகுபடுத்துவதற்காக கம்பனி பதிவாளர் அலுவலக சட்ட கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்துவது […]

நடிகர் மனோபாலா காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார். 69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் அவர் காலமானார்.