“உக்ரனை விட்டுவிடுங்கள்”

G7 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் இன்று முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதற்காக அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர். முதல் நிகழ்வாக, இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா வீசிய அணுகுண்டால் பெரும் பேரழிவை சந்தித்த மக்களின் நினைவாக ஹிரோஷிமாவில் உள்ள நினைவரங்கில் உலக நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த பெரும் தாக்குதலில் பலியானவர்கள் எண்ணிக்கை இதுவரை உறுதியாக தெரியவில்லை. […]

ரெயின்போ ஜெர்சியில் களம் காணும் டெல்லி கேபிடல்ஸ்

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை டெல்லி கேபிடல்ஸ் அணி (DC) நாளை எதிர்கொள்கிறது . இந்த போட்டி டெல்லியில் நடைபெறுகிறது. இதில் டெல்லி அணி ரெயின்போ ஜெர்சி அணிந்து விளையாடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 சீசன் முதல் இந்த வழக்கத்தை டெல்லி அணி கொண்டுள்ளது. சீசனின் ஏதேனும் ஒரு போட்டியில் மட்டும் இந்த ரெயின்போ ஜெர்சியை டெல்லி வீரர்கள் அணிந்து விளையாடுவார்கள். இந்த ஜெர்சியை அணிந்து விளையாடிய எந்தவொரு போட்டியிலும் […]

சீன ஜனாதிபதி எடுத்த அதிரடி முடிவு

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மத்திய ஆசியாவின் வளர்ச்சிக்கான தனித்துவமான திட்டத்தை வெளியிடுள்ளார். பிராந்தியத்திற்கு தலைமைத்துவத்தை வழங்குவதுடன் வர்த்தகத்தை மேம்படுத்துவதும் இதன் நோக்கம் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மத்திய ஆசியா பொதுவாக ரஷ்ய செல்வாக்கின் கீழ் உள்ள ஒரு பகுதி. கஜகஸ்தான்இ கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு நவீனத்துவத்தை அறிமுகப்படுத்தி ஊக்குவிப்பதாக சீன ஜனாதிபதி கூறினார். சீனாவில் இடம்பெற்ற சீன-மத்திய ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே […]

நிலப்பரப்பு பிரிவை ஏற்க மறுத்த பாலஸ்தீன தரப்பு

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் மேற்குகரை மற்றும் காசா முனை பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையில், பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டில் இருந்து 1947-ம் ஆண்டு இஸ்ரேல் – பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளாக பிரிக்கப்பட்டது. இஸ்ரேல் தன்னை தனிநாடாக அறிவித்துக்கொண்டது. ஆனால், நிலப்பரப்பு பிரிவை ஏற்க மறுத்த பாலஸ்தீன தரப்பு இஸ்ரேல் நாடு […]

காமெடி நிகழ்ச்சியில் சீன ராணுவம் குறித்து அவதூறான வார்த்தை

சீன தலைநகர் பீஜிங்கில் சியாகுவோ என்ற காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார். அப்போது அவர் சீன ராணுவம் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நிகழ்ச்சியை நடத்திய சியாகுவோ நிறுவனத்துக்கு சுமார் ரூ.16 கோடி அபராதம் விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது. இதற்கிடையே இந்த […]

கனடாவில் காளானை நுகர்வதனால்…….??

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் விற்பனை செய்யப்படும் ஓர் வகை காளான் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Golden Mushroom என்னும் பண்டக் குறியைக் கொண்ட Enoki mushrooms வகைகளை அந்நிறுவனம் வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது. இந்த வகை உற்பத்தி வேறும் மாகாணங்களிலும் விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த காளானை நுகர்வதனால் பற்றிரீயா வகையொன்றினால் தீங்கு ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காளானை உட்கொள்வதனால் வாந்தி, தலைவலி, காய்ச்சல், தசை வலி, கழுத்து வலி உள்ளிட்ட பாதிப்புக்கள் ஏற்படலாம் […]

கனடாவிலேயே இறுதிச்சடங்கு செய்யப்பட்டுள்ள இந்திய மாணவர்கள்

கல்வி கற்பதற்காக பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பி வைத்திருந்த இரண்டு இந்தியக் குடும்பங்களுக்கு ஒரே நேரத்தில் துக்க செய்திகள் வந்துள்ளன. கடந்த வாரம், கனடாவின் தலைநகரான Ottawaவில் நிகழ்ந்த விபத்து ஒன்றில், இந்திய மாணவர்கள் இருவர் பலியாகினர். இரண்டு மாணவர்களுக்கும் கனடாவிலேயே இறுதிச்சடங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகள் படித்து முடித்து தங்களை கனடாவுக்கு அழைத்துக்கொள்வார்கள் என்ற ஆசையிலிருந்த அவர்களுடைய பெற்றோர், தற்போது அவர்களுடைய அஸ்திக் கலசங்கள் இந்தியாவுக்கு வருவதை எதிர்நோக்கிக் கவலையுடன் காத்திருக்கிறார்கள்.

டிஜிட்டல் மற்றும் பசுமை பொருளாதாரம்

நாட்டை டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி கொண்டுச் செல்லும் பணியை துரிதப்படுத்துவது தொடர்பிலான அறிக்கையொன்றை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்குமாறு துறைசார் இராஜாங்க அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கொழும்பு 08, எல்விட்டிகல மாவத்தையில் நிறுவப்பட்டுள்ள டராஸ் தலைமையகத்தை திறத்து வைக்கும் நிகழ்வில் நேற்று (18) உரையாற்றியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வரி சேகரிப்பு பணிகளுக்காக நிறுவப்பட்டுள்ள வருமான நிர்வாக முகாமைத்துவ தகவல் கட்டமைப்பான ரெமிஸ் (RAMIS) தொடர்பில் 1993 […]

ரொறன்ரோவில் பெற்றோலின் விலை

ரொறன்ரோவில் பெற்றோலின் விலை மீண்டும் உயர்வடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ரொறன்ரோ பெரும்பாக பகுதிகளில் இவ்வாறு பெற்றோலின் விலை உயர்வடையும் என தெரிவிக்கப்படுகின்றது. அடுத்த வாரம் முழுவதிலும் விலை ஏற்றங்களை எதிர்பார்க்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது ஒரு லீற்றர் பெற்றோல் 154 சதங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 215.9 சதங்களாக காணப்பட்டது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  

அனைவரும் தியாகம் செய்ய வேண்டும்

 “அனைவரும் தியாகம் செய்ய வேண்டும் என கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ ஜி.பரமேஸ்வரா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிஸ் கட்சி ஐந்து நாள் இழுபறிக்கு பின்னர் வியாழக்கிழமை மாநிலத்தின் முதல்வராக சித்தராமையாவையும், ஒரே துணைமுதல்வராக டிகே சிவகுமாரையும் அறிவித்தது. மேலும் 2024 மக்களவைத் தேர்தல் முடியும் வரை மாநில காங்கிரஸின் தலைவராக அவரே தொடர்வார் எனவும் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.