ஆறுமுகம் தொண்டமானின் நினைவாக விசேட முத்திரையும் கடித உறையும்(Photos)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமானின் நினைவாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட நினைவு முத்திரை மற்றும் கடித உறை என்பன இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. வெகுசன ஊடகம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நினைவு முத்திரையும் கடித உறையும் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் சபாநாயகர் கரு […]

எவரஸ்ட் மலை உச்சியை அடைய வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தவர்

எவரஸ்ட் மலையின் உச்சியை அடைந்து விட வேண்டும் என்ற வாழ் நாள் கனவை நினைவாக்கிக் கொள்ளும் நோக்கில் ஈடுபட்டிருந்த முயற்சியின் கனடியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனடாவின் வான்கூவரைச் சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 63 வயதான பீட்டர் ஸ்வாட் என்ற நபவரை மலை ஏறிக்கொண்டிருந்த போதே உயிரிழந்துள்ளார். பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழக துணைப் பேராசிரியராக கடமையாற்றிய ஸ்வாட் இவ்வாறு உயிரிழந்துள்ளார். தனது ஒன்பது வயது முதலே எவரஸ்ட் மலை உச்சியை அடைய வேண்டும் என்ற கனவில் வாழ்ந்தவர் […]

கனடாவில் மூன்று ஆண்டுகளாக பணி செய்து வந்த இந்தியர்…..

கனடாவில் மூன்று ஆண்டுகளாக பணி செய்து வந்த இந்தியர் ஒருவரை ஒரு மாதமாகக் காணவில்லை. இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (Nidamanuri Sridhar, 26), கனடாவின் மொன்றியலிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அவர் அலுவலகத்துக்கு வராததால், அவரது அலுவலக ஊழியர்கள் அவரைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளனர். அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் போகவே, அவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஸ்ரீதர் காணாமல் போய் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அவருக்கு என்ன […]

சீனாவில் ஒரு வினோதமான வேலை

சீனாவில் ஒரு பெண் ஒருவர் வினோதமான வேலை செய்து அதன் மூலம் மாத சம்பளம் பெற்று வருகிறார். அங்குள்ள நியானன் என்ற 40 வயது பெண் சுமார் 15 ஆண்டுகள் செய்தி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அந்த வேலை மிகுந்த அழுத்தம் நிறைந்ததாக இருந்துள்ளது. தினசரி எப்போதும் செல்போன் அழைப்புகள் வந்து நிம்மதி இல்லா வாழ்க்கையை தருவதாக மன உளைச்சளுக்கு அவர் ஆளானார். இதை கவனித்த நியானனின் பெற்றோர், அவரிடம் மனம் விட்டு பேசி ஒரு […]

இத்தாலியில் சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்ததால் நால்வர் பலி

இத்தாலியில் உல்லாசப் பயணிகளை ஏற்றிச்சென்ற சுற்றுலாப் படகு ஒன்று கவிழ்ந்ததால் நால்வர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். இத்தாலியின் வட பகுதியிலுள்ள மேகியோர் ஏரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்களில் இரு வெளிநாட்டவர்களும் அடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் இத்தாலியைச் சேர்ந்த ஒரு பெண், ஓர் ஆண், ரஷ்யரான ஒரு பெண், இஸ்ரேலியரான ஓர் ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து திரும்பும் திடீரென உடல்நலக் குறைவு

பெலாரஸ் அதிபர் லுக்காஷென்கோ மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து திரும்பும் போது திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அதிபரின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக பெலாரசின் எதிர்க்கட்சித் தலைவரர் வலேரி செப்காலோ தெரிவித்துள்ளார். ரஸ்யாவில் நஞ்சூட்டப்பட்டதா? பெலாரஸ் அதிபரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வரும் நிலையில்,அவரது உடல் நலம் பற்றிய வதந்திகள் வந்துக் கொண்டிருக்கின்றன. பெலாரசின் சர்வாதிகாரத் தலைவரான 68 வயதான லுக்காஷென்கோ அதிபர் புதினின் நம்பகமான […]

காங்கிரஸ் பலமாகவே உள்ளது – ஜீவன்

அமரர்.ஆறுமுகன் தொண்டமானின் மறைவோடு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் காங்கிரஸ் இன்னமும் பலமாகவே உள்ளது. இதற்கு எமது தற்போதைய அரசியல் வகிபாகமே சிறந்த சான்று என CWC  பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். நுவரெலியா மாவட்டத்தில், தலவாக்கலை உப பிரதேச செயலகம், நோர்வூட் உப பிரதேச செயலகம் என்பன பிரதேச செயலகங்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய பிரதேச செயலகங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வு அமைச்சர் ஜீவன் […]

மஹியங்கனை புன்னியஸ்தலம் புனிதபூமியாக பிரகடனம் (Photos)

மஹியங்கனை விகாரை வளாகத்தை புன்னியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மகாவிஹார வங்சிக்க ஷ்யாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி தரப்பின் சிரேஷ்ட காரக சங்க உறுப்பினர், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி மஹோபாத்யாய வண. உருலேவத்தே தம்மரக்கித்த தேரரிடம் கையளித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரையின் புனரமைப்புப் பணிகளில் பங்கேற்ற சுதந்திர இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில் நேற்று (28) பிற்பகல் மஹியங்கனை விகாரைக்குச் […]

LPL ஏலம் ஜூன் 14

2023 LPL வீரர்கள் ஏலம் ஜூன் 14 ஆம் திகதி கொழும்பில் நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்காக, அணி $500,000 முதலீடு செய்யப் போகிறது என கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் ஐந்து அணிகளும் $2.5 மில்லியன் வீரர்களுக்கு முதலீடு செய்யப் போகிறது. இலங்கையில் வீரர்கள் ஏலம் நடைபெறுவது இதுவே முதல் முறை. LPL 2023 ஜூலை 30 முதல் ஒகஸ்ட் 20 வரை நடைபெறும்.

இன்றைய போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டால்?

சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் IPL இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நேற்று இரவு 7.30க்கு தொடங்க இருந்தது. ஆனால் மழையால் இறுதிப் போட்டி பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தை கைவிடுவதாக நடுவர்கள் அறிவித்தனர். மாற்றுதினமான இன்று IPLL  இறுதிப்போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இன்றைய இறுதிப் போட்டியும் ஒரு வேளை மழையால் பாதிக்கப்பட்டால் குஜராத் டைட்டன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மழையால் இரவு 9.40 மணிக்கு முன்பு ஆட்டம் தொடங்கினால் ஓவர்கள் குறைக்கப்படாமல் […]