கச்சத்தீவை போல காவிரியை தாரைவார்க்க தயாராகிவிட்டீர்களா?

“கர்நாடக முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர், தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க வேண்டிய மேகதாது விவகாரத்தில் கண்டன குரல் கொடுக்காமல் ஏன் வந்தார்? தங்கள் ஆட்சியின் போது கச்சத் தீவை தாரைவார்த்தது போல் இப்போது காவிரியையும் தாரை வார்க்க தயாராகி விட்டீர்களா?” என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி தலைவர் எம்.யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடக மாநிலத்தின் துணை முதல்வராகவும், நீர்வளத் துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள டி.கே.சிவக்குமார் […]

அரச பொசன் செலவு

2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அரச பொசொன் நிகழ்வுக்கும், மிஹிந்தல புனித பூமியை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் பொசொன் நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் அனுசரணை கிடைக்கவில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இது தொடர்பில் புத்த சாசன, மத, கலாச்சார அலுவல்கள் அமைச்சு, பொது நிர்வாக அமைச்சு, உள்நாட்டலுவல்கள் மாகாண சபை உள்ளூராட்சி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், அனுராதபுரம் மாவட்ட செயலகம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு, லேக்ஹவுஸ் நிறுவனம் என்பவற்றிடமிருந்து […]

வாக்களித்த, வாக்களிக்காத அனைவருக்கும் சேவையாற்றுவேன் – டெனியல் ஸ்மித்

தேர்தலில் தமக்கு ஆதரவாக வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் ஒரேவிதமாக சேவையாற்ற உள்ளதாக அல்பர்ட்டா மாகாண முதல்வர் டெனியல் ஸ்மித் தெரிவித்துள்ளார். அனைத்து அல்பர்ட்டா மக்களின் நம்பிக்கையையும் வென்றெடுக்க முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு, பொருளாதாரத்தை மேம்படுத்தல் போன்ற விடயங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழல் மற்றும் சக்தி வள கொள்கைகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து கொண்டு மாகாணத்தை வழிநடத்த உத்தேசித்துள்ளதாக டெனியல் ஸ்மித் […]

ஜனாதிபதியின் ஜப்பான் விஜயம் எப்படியாது?

ஜப்பான் விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது வெளிவிவகார மற்றும் பொருளாதார கொள்கைகளை உலகிற்கு தெளிவாக எடுத்துரைத்திருப்பது, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். இலகு ரயில் திட்டத்தை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கும் இந்நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஜப்பானின் ஆதரவை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கும் ஜப்பானிய பிரதமருடனான கலந்துரையாடலில் ஜனாதிபதி மேற்கொண்ட தலையீடானது ஒரு மேம்பட்ட இராஜதந்திர […]

ICCக்கு நெருக்கடி?

உலகக் கிண்ணத்திற்க்கு முன்பாக பாகிஸ்தானில் நடைபெறும் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி, பாகிஸ்தான் வர மறுத்தால், பாகிஸ்தான் அணியும் உலகக் கிண்ண தொடருக்கு இந்தியா செல்லாது என பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் நஜீம் சேத்தி தெளிவாகக் கூறியதை அடுத்து பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐசிசி தலைவர் கிரெக் பார்க்ளே, சிஇஓ ஜெஃப் அலார்டிஸ் ஆகியோர் லாகூருக்கு வந்துள்ளதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒரு சுமுக முடிவு […]

காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் குறித்து கவனம்

விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த அரச நிறுவன அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் பில் அன்ட் மெலிண்டா கேட்ஸ் அமைப்பு (Bill and Melinda Gates foundation) உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். விவசாயத் துறையின் நவீனமயமாக்கல், போசாக்கு, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் நிதிப் பாதுகாப்பு ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்கையில் தரவு அடிப்படையிலான முடிவுகளை எடுப்பதற்கான […]

கனடாவில் 12 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண்

கனடாவில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மெடிசன் ஸ்கொட் என்ற பெண்ணே இவ்வாறு காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் 29ம் திகதி பிரிட்டிஷ் கொலம்பியாவின் வான்டர்ஊப் பகுதியில் காணாமல் போயிருந்தார்.20 வயதான பெண்ணே இவ்வாறு காணாமல் போயிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. பிறந்த நாள் விருந்துபசாரமொன்றில் கலந்து கொண்டிருந்த போதே மெடிசனை இறுதியாக பார்த்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மரணம் தொடர்பில் […]

புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞர் குறித்த துயரச் சம்பவம்

கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார். இச் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீ விபத்தில் சிக்கிய பூணைகளை காப்பாற்ற முயற்சித்த 4 பேர் ….

கனடாவில் ஒன்றாரியோவின் மொடொன்ட் பகுதியில் தீ விபத்தில் சிக்கிய பூணைகளை காப்பாற்ற முயற்சித்த 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டிடமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குப்பை தாங்கியொன்றில் ஏற்பட்ட தீ விபத்து அருகாமையில் உள்ள வீடு ஒன்றிற்கும் பரவியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீட்டில் ஒர் பகுதி பூணைகள் காப்பகமாக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குப்பைத் தொட்டி தீப்பற்றிக் கொண்ட போது வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தீப்பற்றிக் கொண்ட கட்டிடத்தில் இருந்த பூணைகளை மீட்பதற்கு சில முயற்சித்த போது, […]

சிங்கப்பூரில் கோவிலில் 14.2 கோடி ரூபா அளவுக்கு மோசடி செய்த அர்ச்சகர்

சிங்கப்பூரில் உள்ள கோவிலில் தொடர் மோசடியில் ஈடுபட்ட அர்ச்சகருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.சிங்கப்பூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சைனா டவுனில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் முக்கியமான ஒன்றாகும். இது கடந்த 1827ஆம் ஆண்டு கட்டப்பட்டது.சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தீமிதித் திருவிழா இக்கோயில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில்தான் நடைபெறுகிறது. இந்த கோவிலின் தலைமை குருக்கள் பொறுப்பில் சிவஸ்ரீ கந்தசாமி சேனாபதி என்பவர் இருந்தார். இவர் கோவில் நகைகளை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. […]