பாலியல் கல்வி தொடர்பான ஆலோசனை வழங்கிய ஜோஹன்சன் காலமானார்

பல தசாப்தங்களாக கனடிய மற்றும் அமெரிக்கர்களுக்கு பாலியல் உறவுகள் குறித்து நேர்மையான ஆலோசனைகளை வழங்கிய பாலியல் கல்வியாளர் சூ ஜோஹன்சன் காலமானார். 93 வயதான ஜோஹன்சனின் உயிர் கனடாவின் டொரண்டோவில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் பிரிந்ததாக அவர் குடும்பத்தார் தெரிவித்துள்ளனர். அவரது சண்டே நைட் பாலியல் ஆலோசனை நிகழ்ச்சி கனடாவில் மிகவும் பிரபலமானதாகும். வட அமெரிக்க பார்வையாளர்களுக்கும் பாலியல் கல்வி தொடர்பான ஆலோசனைகளை ஜோஹன்சன் வழங்கியிருக்கிறார். பதிவுசெய்யப்பட்ட செவிலியராக இருந்த ஜோஹன்சனுக்கு பாலியல் கல்வியை கற்பிப்பதில் ஆர்வம் […]
பல்கலைக்கழகங்களில் இன அடிப்படையில் மாணவ அனுமதி

அமெரிக்க பல்கலைக்கழகங்களில் இன அடிப்படையில் மாணவர்களை அனுமதிப்பதற்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பிலான தடை உத்தரவினை உச்ச நீதிமன்றம் நேற்றைய தினம் (29) பிறப்பித்தது. கறுப்பினத்தவர்கள் மற்றும் ஏனைய சிறுபான்மையினரின் கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக பல தசாப்தங்களாக பின்பற்றப்பட்ட சீர்திருத்தச் செயலாக்கம் எனக் குறிப்பிடப்படும் இந்நடைமுறைக்கு இத்தீர்ப்பு பாரிய அடியாக மாறியுள்ளதாக அமெரிக்க அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பிரதம நீதியரசர் ஜோன் ரொபர்ட்ஸ் தெரிவிக்கையில் இத்திட்டமானது சிறந்த நோக்கத்தைக் […]
பிரான்சில் தினமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்

பிரான்சில் இரண்டாவது இரவாக நேற்றைய தினமும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, நகரங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக சுமார் 40,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதோடு 180 பேருக்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாரின் உத்தரவிற்கு அடிபணியாது தனது காரை நிறுத்தாது செலுத்திச் சென்ற 17 வயது சிறுவன் ஒருவனை சுட்டுக்கொன்ற சம்பவம் பிரான்சில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. நாஹேல்.எம் என அழைக்கப்படும் இந்த சிறுவன் பொலிஸாரால் […]
ஜெர்மனியில் பல்கலைகழக மாணவர்களுக்கு உதவிகள்

ஜெர்மனியில் பல்கலைகழக மாணவர்களுக்கான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி நாட்டில் பல்கலைகழக மாணவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த சலுகையானது பற்றாக்குறை காணப்படுவதாக தற்பொழுது ஒரு அமைப்பானது தெரிவித்து இருக்கின்றது. ஜெர்மனியின் மிக பெரிய தொழிற்சங்கமான டொச்சவிங் வியட்ச்சங்முன் என்று சொல்லப்படுகின்ற அமைப்பானது பல்கலைகழக மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்குகின்ற பாஃவக் என்று சொல்லப்படுகின்ற நிதியத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. அதேவேளையில் தற்போதைய கூட்டு அரசாங்கமானது தற்பொழுது மாணவர்களுக்கு பாஃவக் […]
அமெரிக்க பாப் இசை ராணி மடோனா தீவிர சிகிச்சை பிரிவில்

பாப் இசை பாடல்களின் ராணியாக உலகம் முழுவதும் புகழ் பெற்றவர் 64 வயதான அமெரிக்க பாடகி மடோனா. பாடகி மடோனா சில தினங்களுக்கு முன் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டு உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சுவாச சீராக்கத்திற்காக இண்டுபேஷன் (intubation) சிகிச்சை வழங்கப்பட்டது. பின்பு அதை வைத்தியர்கள் அகற்றினர். அவர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் உள்ளார். பாடகரின் குடும்ப உறவினர் ஒருவர், “கடந்த இரண்டு நாட்களாக, இது (மடோனாவின் […]
தகவல்களை செயற்கை நுண்ணறிவுடன் பகிர்ந்து கொள்வது ஆபத்து

கனடாவில் பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இவ்வாறு அதிகளவில் பயன்படுத்தும் போது சில முக்கியமான தகவல்கள் கசியக்கூடிய சாத்தியங்கள் உண்டு என தெரிவிக்கப்படுகின்றது. செயற்கை நுண்ணறிவை பாடசாலைகளிலும், பணிகளிலும் பயன்படுத்துவதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்ற 20 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்துக் கணிப்பு சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம்மேற்கொள்ளப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதன் மூலம் பணியின் தரம் மற்றும் வினைத்திறன் அதிகரிப்பதாக கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர். வாடிக்கையாளர் ஒப்பந்தங்கள் […]
பிரான்சில் 17 வயது சிறுவன் சுட்டு கொலை

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு உட்பட்ட நான்டர் புறநகரில் போக்குவரத்து நிறுத்தம் பகுதியில் நீல் (வயது 17) என்ற சிறுவன் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவத்தில் அந்த சிறுவன் உயிரிழந்து விட்டான். கீழ்படியவில்லை என்பதற்காக போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி தெரிந்ததும், மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், பலர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பாரீசின் எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறுவன் […]
மேற்கு ஆப்பிரிக்காவில் திடீர் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள்

மேற்கு ஆப்பிரிக்கா நாடான புர்கினோ பாசோவில் பயங்கரவாதிகள் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இதனால் ராணுவத்தினரை கொண்டு நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் வேலையில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் பாம் மாகாணத்தின் நம்சிகுவா பகுதியில் ராணுவ வீரர்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் மறைந்து இருந்து ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது துப்பாக்கியால் சுட்டும், குண்டுகள் வீசியும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர் முதலில் தடுமாறிய வீரர்கள் எதிரிகளை […]
ஜப்பானில் நதியின் நிறம்…..

ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென அடர் கருஞ்சிவப்பு நிறமாக மாறியது. இதை கண்ட உள்ளூர் மக்களும், பார்வையாளர்களும் அச்சமடைந்தனர். அங்குள்ள ஒரு மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பு ஒன்றில் இருந்து உணவில் நிறத்திற்காக சேர்க்கப்படும் சாயம் கசிந்ததால் நதியின் நிறம் மாறியதாகவும், இது நேற்று முன்தினம் நிகழ்ந்திருக்கலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னர் காலை 09:30 மணியளவில் கசிவு நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆறு மில்லியன் கனேடியர்களுக்கு ஒரு குடும்ப நல மருத்துவர் இல்லை

கனடாவில், குடும்ப நல மருத்துவர்கள் முதல், பல்வேறு மருத்துவத்துறைப் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஆகவே, அது தொடர்பான அறிவிப்பு ஒன்றை நேற்று பெடரல் அரசு வெளியிட்டுள்ளது. கனடாவில், குடும்ப நல மருத்துவர்கள் முதல், பல்வேறு மருத்துவத்துறைப் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதைத் தொடர்ந்து, கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பைப் பயன்படுத்தி மருத்துவத்துறைப் பணியாளர்களைப் பணிக்கு எடுக்க இருப்பதாக பெடரல் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தக ஊழியர்கள், பல் மருத்துவர்கள், பிஸியோதெரபிஸ்டுகள், கண் சிகிச்சை நிபுணர்கள் முதலானோருக்கு […]