கனடாவில் ஜனநாயகத்தை மதிப்பதில் பெண்களுக்கு முதலிடம்

கனடாவில் ஜனநாயகத்தை கூடுதலாக மதிப்பது பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சமூக பெறுமதிகளையும் ஜனநாயகத்தையும் அதிகளவில் மதிக்கும் பண்பு பெண்களிடம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல் வெளியிட்டுள்ளது. ஆண்களை விடவும் ஒப்பீட்டளவில் பெண்கள் ஜனநாயக பெறுமதிகளை கூடுதலாக மதிக்கின்றார்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டத்திற்கு மதிப்பளித்தல், பல்வகைத்தன்மை, இன, கலாச்சார பல்வகைமை மற்றும் பழங்குடியின கலாச்சாரம் போன்ற பல விடயங்களில் பெண்கள் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் போராடிய கனடிய முன்னாள் படைவீரர் பலி

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் சார்பில் சண்டையிட்ட கனடாவின் முன்னாள் படைவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈராக்கிற்கு சென்று அங்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்ட முன்னாள் படைவீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு குறித்த நபர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பிலால் கான் என்ற இந்த நபர் கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் போரில் உயிரிழந்து விட்டதாக கனடிய இராணுவம் தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளது. அமரசிங்கம், குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் […]

பொருட்களின் விலை குறைக்கப்படும்?

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதன் காரணமாக எதிர்காலத்தில் பல துறைகளின் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (01) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பெருந்தோட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம்

மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம். அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு ஐக்கிய இராச்சியத்தின்  உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனிடம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின்  உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அமைச்சர்  ஜீவன் தொண்டமானுடன் இன்று (01) பேச்சு நடத்தினார். நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு மலையக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்த ஜீவன் […]

மத்திஷவை பார்த்து கொள்ள தயார் தோனி

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் புகழைப் பெற்ற மத்திஷவுக்கு எதிர்வரும் ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணியின் வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. தனது பந்துவீச்சு நிலைப்பாட்டினால் கிரிக்கெட் உலகையே கைப்பற்றிய லசித் மலிங்கவுக்குப் பிறகு இன்று கிரிக்கெட் களத்தில் அதிகம் பேசப்படும் பந்து வீச்சாளர் இளம் வீரர் மதிஷ பத்திரன. மதிஷ 2020 ஆம் ஆண்டு முதல் முறையாக 19 வயதுக்குட்பட்டோருக்கான இலங்கை அணியில் இணைந்தார். மதிஷ அபுதாபி T10 லீக்கில் விளையாடி தனது திறமைகளை வெளிப்படுத்தினார், […]

எலான் மஸ்க் மீண்டும் முதலிடத்தில்

உலக பணக்காரர்கள் பட்டியலில் எலான் மஸ்க்(Elon Musk) மீண்டும் முதலிடத்திற்கு முன்னெறியுள்ளார். இந்த பட்டியலில் இதுவரை முன்னிலையிருந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 74 வயதான பேர்னட் ஆர்னோல்ட் (Bernard Arnault) என்பவர். பேர்னட் ஆர்னோல்ட் மற்றும் எலான் மஸ்க் இடையே அவ்வப்போது போட்டித்தன்மை நிலவி வந்துள்ளது. இந்நிலையில், எலான் மஸ்க் மீண்டும் உலக பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளார். Bloomberg Billionaires Index-இன் தற்போதைய கணக்கீட்டின் படி எலான் மஸ்க்கின் நிகர சொத்து மதிப்பு 192 பில்லியன் […]

கொட்டகலையில் இலங்கை மின்சார சபையின் நடமாடும் சேவை

கொட்டகலை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இலங்கை மின்சார சபையின் ஹட்டன் கிளை காரியாலயத்தின் ஊடாக கொட்டகலை ஸ்ரீ முத்து விநாயகர் தேவஸ்தானத்தில் 02/06/2022 நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது. இந்நடமாடும் சேவையூடாக புதிதாக மின்சாரம் இணைப்பை மேற்கொள்ள இருப்பவர்கள்,மின்சார பட்டியல் தொடர்பான விபரங்கள்,மின்சார பட்டியலின் பெயர்மாற்றம்,பாதிக்கப்பட்ட தூண்களை மாற்றுதல் உட்பட மின்சார சபையூடாக முன்னெடுக்கப்படும் சகல வேலைகளும் செய்து தர உள்ளதாகவும் கொட்டகலை நகரத்திற்கு உட்பட்ட பொதுமக்கள் அனைவரையும் தவறாது கலந்து கொள்ளுமாறு கொட்டக்கலை வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆப்கான் கிரிக்கெட் பிரபலத்திற்கு வந்த சோதனை

ஆப்கானிஸ்தான்-இலங்கை அணிகளுக்கு இடையிலான இடையிலான ஒருநாள் தொடர் நாளை ஹம்பாந்தோட்டையில் தொடங்குகிறது. அந்த போட்டியில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ரஷித் கான் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ரஷித் 27 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜூன் 02 ஆம் திகதி ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ளது.

வசீகரித்த சூரிய அஸ்தமனம்

சூரிய உதயமும், அஸ்தமனங்கலும் ஓடிக்கொண்டிருக்கும் மனித வாழ்கையில் ஒரு கணம் அமைதிப்படுத்தக் கூடியவை. அந்த மன அமைதியைதான் நியூயோர்க் பகுதிவாசிகள் நேற்று கடத்திருக்கிறார்கள். நியூயோர்க்கின் பரப்பரப்பான வீதிகளில் ஒன்று மன்ஹாட்டன். வானளவு உயர்ந்த கட்டிடங்களால் உலக அளவில் பெயர் பெற்றது மன்ஹாட்டன். இதில் மன்ஹாட்டனின் முக்கிய வீதிகளில் நேற்று மாலை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இயற்கையின் கண்கொள்ளா காட்சியை தங்களது கைபேசிகளில் பதிவு செய்திருக்கிறார்கள். காரணம்… மன்ஹாட்டனின் பிரமாண்ட உயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் பிரமாண்ட சூரியன் மெல்ல […]

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரிக்கை

கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில், தினசரி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட  டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ளதாக வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்தார். இதேவேளை, கடந்த வாரத்தை விட 24 மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரவுகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 39028  டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.