ஒடிசா ரயில் விபத்து – நேரில் பார்வையிட்டார் மோடி

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று மத்திய மந்திரிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கோர விபத்து எப்படி நடந்தது? மீட்பு மற்றும் மீட்கப்பட்டவர்களின் நிலை, மீட்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, நிவாரண விபரங்கள் உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் ஆலோசனையில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ரயில் விபத்து நடந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து கட்டாக் […]

ஓய்வு பெறுவது குறித்து வோனர் யோசனை???

அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன்படி, அடுத்த வருடம் சிட்னியில் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியே தனது கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியாக இருக்கும் என அவர் அறிவித்துள்ளார். அந்த போட்டிக்கு முன்னதாக எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள WTC இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஏஷஸ் கிரிக்கட் போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளதாக சர்வதேச […]

எதிர்காலத்தில் அர்பணிப்புக்கள் தேவைப்படலாம் – ஜனாதிபதி (PHOTOS)

பாராளுமன்றத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50% பலத்தை பெற்றுக்கொள்ள முடியாது என்பதால் தேர்தலுக்காக ஒன்றுபடுவதை விடுத்து  பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெக்க சகலரும் ஒன்றுபட வேண்டியது அவசியமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தற்போதும் இந்நாட்டு மக்களில்  பெரும்பாலானோர் தேர்தல் மற்றும் அரசியல் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா கிரேண்ட்  ஹோட்டலில்  நேற்று (02) நடைபெற்ற “2023/ 2024 தேசிய சட்ட மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். சட்டம் […]

மகனின் தலையின் ஒரு பகுதியைச் சாப்பிட்ட தாய்

எகிப்தில் ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மகனை திட்டமிட்டு கொலை செய்துள்ள குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படுள்ளார்.இந்த கொலை சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்றுள்ளது. 29 வயதுடைய ஹனா மொஹமட் ஹசன் என்பவர் தனது மகனை தலையில் மூன்று முறை தாக்கி கொலை செய்துள்ளார்.கொலையை மறைக்க அவர் தனது மகனின் உடலை அகற்ற முடிவு செய்துள்ளார்.இதன்படி அவரது உடலைச் சிறு சிறு பாகங்களைத் துண்டித்துள்ளார். அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகக் கொலை செய்யப்பட்டவரின் மாமா அங்கே வருகை […]

மிரர் குழுமத்திற்கு எதிராக இளவசர் ஹாரி

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் இளைய புதல்வர் இளவசர் ஹாரி அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளார். கடந்த 130 ஆண்டுகளுக்கு பின்னர் அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகுவது இதுவே முதல் முறையாகும். இங்கிலாந்தில் வெளியாகும் டெய்லி மிரர், சன்டே மிரர் ஆகிய பத்திரிகைகளின் வெளியிட்டு நிறுவனமான மிரர் குரூப் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் பிரபலங்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதாகவும் அவர்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 100 பிரபலங்களுடன் இளவரசர் ஹாரியும் […]

கடினமான நேரத்தில், கனடியர்கள் இந்திய மக்களுடன் நிற்கிறார்கள் – கனடா பிரதமர்

இந்தியாவின் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானதில் 200 மேற்பட்டோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில் ரயில் விபத்தின் காட்சிகளை பார்த்து தன் இதயம் நெருங்கி போய் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். ரயில் விபத்தின் படங்கள் தனது இதயத்தை உடைத்துவிட்டதாக “இந்தியாவின் ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தின் படங்கள் மற்றும் அறிக்கைகள் என் இதயத்தை உடைக்கிறது. அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் […]

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சிட்டை கொண்ட நாடுகள்

உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சிட்டை கொண்ட நாடுகள் பல உள்ளன. நாடுகளின் கடவுச்சீட்டுக்கள் ஒரு சில விதிமுறைக்கு அமைய கணிக்கப்படுகின்றது. அதாவது ஒரு passport வைத்துக்கொண்டு எந்த நாட்டிற்கு எல்லாம் செல்லலாம் என்பதே ஆகும் .அந்த வகையில் முதலிடத்தை ஜப்பானும் , இரண்டாவது இடத்தை சிங்கப்பூர், தென் கொரியா நாடுகளும் மூன்றாவது இடத்தை ஜெர்மனி, ஸ்பெயின் நாடுகளும் பிடித்துள்ளன. அதேவேளை அவுஸ்திரேலியா, கனடா, கிரீஸ், மால்டா ஆகியநாடுகள் எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. 1. ஜப்பான் (193 இடங்கள்) […]

கனடா செல்ல இருந்த இந்திய பிரஜை

இலங்கை வழியாக கனடா செல்வதற்காக இந்திய பிரஜையொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில், விமானத்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் வியாழக்கிழமை (1) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர். சம்பவத்தில் கே. ஜோர்ஜ் (65) என்ற இந்தியப் பிரஜையே உயிரிழந்துள்ளார். விமானத்தில் இருந்து தவறி விழுந்த இந்திய பிரஜை சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ஒடிசா ரயில் விபத்து: 260 பேர் பலி – மீட்புப் பணிகள் நிறைவு…

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகா என்ற இடத்தில் நேற்றிரவு மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகிய கோர சம்பவம் நடைபெற்றது. சுமார் 16 மணி நேரம் இடைவிடாத மீட்புப்பணியில் வீரர்கள் ஈடுபட இன்று காலை 11 மணியளவில் மீட்புப்பணிகள் நிறைவடைந்தன. இந்த கோர விபத்தில் 260 பேர் பலியாகியுள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக ரயில்வே நிர்வாகம் அறிவிக்காத நிலையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 20 ஆண்டு […]

பொருளாதார மறுசீரமைப்பை தொடர வேண்டும் – IMF

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்த சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா (Kenji Okamura) அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். தனது விஜயத்தின் போது, பொருளாதார ஸ்திரத்தன்மையை மீள எட்டுவதற்கான நிதி நடவடிக்கைகள்,  வருமான வழிமுறைகளின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உரிய நேரத்திலும் வெளிப்படைத்தன்மையுடனும் கடனைப் பெறுவதற்கான உத்திகளைப் பற்றி கலந்துரையாடுமாறு இலங்கை அதிகாரிகளை தான் ஊக்குவித்ததாக கென்ஜி ஒகமுரா கூறியுள்ளார்.   பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல், கடன் நிலைத்தன்மையை மீட்டெடுத்தல், நிதி […]