பங்களாதேஷ் அணிக்கு “பாம்பாட்டம்” காட்டிய பத்திரன, அஸலங்க! 5 விக்கெட்டுகளால் இலங்கை வெற்றி!
ஆசிய கிண்ணத்திற்கான இரண்டாவது போட்டி பல்வேகலயில் இன்று நடைப்பெற்றது. இலங்கை பங்களாதேஷ் அணிகளுகிடையிலான இன்றைய சர்வதேச ஒருநாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பங்களாதேஷ் அணித்தலைவர் சகிப் ஹல் ஹசன் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். பங்களாதேஷ் அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் 164 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. முதலில் ஆடுகளம் நுழைந்த பங்களாதேஷ் அணி அதிகளவு ஓட்டங்களை பெற நினைத்த போதிலும் மஹேஸ பத்திரனவின் துல்லியமான பந்தை எதிர்நோக்க முடியாமல தடுமாறினார்கள். அவர் 32 ஓட்டங்களுக்கு […]
சாய்ந்தமருதில் வகை வகையான போசனை உணவுகள் !
நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் போசனைமிக்க உணவுகளை தயாரித்து அதனை தாய்மார்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று 2023.08.31 ஆம் திகதி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் தலைமையில் நடைபெற்றது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் குறித்த அலுவலகத்தின் பொது சுகாதார மாதுக்களும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்களும் இணைந்து சமகால […]
நள்ளிரவு முதல் எரிப்பொருள் விலை அதிகரிப்பு
எம நாசீர் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 361 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரித்து புதிய விலை 417 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 35 ரூபாவினால் குறைத்து, புதிய விலை 341 ரூபாவுக்கு விற்பனை […]
தலை தூக்கும் காவிகளும்! சிதைந்து வரும் ஜனநாயகமும்
இருளப்பன் ஜெகநாதன் சுயாதீன ஊடகவியலாளர் அண்மையில் பௌத்த பிக்குகள் 13 ஆம் அரசியல் திருத்தத்துக்கு எதிராக போர் கொடி தூக்கியுள்ளனர். மற்றுமொரு புறம் தமிழர் பூர்வீக நிலங்களில் விகாரைகள் அமைக்கும் செயல்பாடுகள் தீவிரம் பெற்று வருகின்றன. இராவணன் தமிழன் இல்லை என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கௌதம புத்தரே சிங்களவர் அல்ல என்ற உண்மையை மறந்து விட்டு இதுபோன்ற வரலாற்று உண்மைகளை திரிவு படுத்தி பேசுகின்ற சிறுபிள்ளை அரசியல் உரைகள் பாராளுமன்றில் ஒலிக்க ஆரம்பித்துள்ளன. ஜே ஆர் […]
அரசஅங்கீகாரத்துடன் தொழிலாளர்களுக்காக காப்புறுதி திட்டம்-அமைச்சர் ஜீவன்
( நூரளை பி. எஸ். மணியம்) மலையக பெருந்தோட்டத்துறையில் நாள் வேதன முறைமைக்கு பதிலாக இலாப பங்கீட்டு முறையை உருவாக்கி தொழிலாளர்களை உற்பத்தி பங்குதாரர்களாக மாற்றுவதே எமது நோக்காக உள்ளது. என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்கூட்டம் தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார தலைமையில் தொழில் அமைச்சில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை முன்வைக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு […]
உலக சாதனை புரிந்த மலையக இளைஞர்கள்!
(க.கிஷாந்தன்) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இளைஞர் அணியின் அனுசரனையில் இடைவிடாது தொடர்ச்சியாக 24 மணிநேரம் நடனமாடி சோழன் உலக சாதனை புத்தகத்தில் மலையக பெருந்தோட்ட சமூகத்தை சார்ந்த 7 இளைஞர்களும், இரு யுவதிகள் இடம்பிடித்துள்ளனர். லிந்துலை,மெரேயா,அக்கரபத்தனை, டயகம ஹப்புத்தளை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த குறித்த இளைஞர், யுவதிகள் 16 முதல் 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் ஹட்டன் பகுதியில் உள்ள நடன பயிற்சி நிலையமொன்றில் பயிற்சி பெற்றவர்கள் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். சோழன் […]
பிரதமர் மோடி பற்றிய உளகளாவிய பார்வை
அமெரிக்காவை சேர்ந்த ‘பியு ரிசர்ச் சென்டர்’ என்ற அமைப்பு ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. இந்தியா உள்பட 24 நாடுகளில் 30 ஆயிரத்து 861 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 20-ந் தேதி முதல் மே 22-ந் தேதி வரை கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. பிரதமர் மோடி பற்றிய உளகளாவிய பார்வை, இந்தியா உலக வல்லரசு ஆவதற்கான வாய்ப்பு, இதர நாடுகளை பற்றிய இந்தியர்களின் கருத்துகள் ஆகியவை கருத்து கணிப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதன் முடிவுகள் தற்போது […]
“பாதுகாப்பான பாதையை தேடி ரோவர்…….
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டு உள்ள சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்து சென்றது. அதில் இருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர் நிலவை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது. நிலவில் சல்பர் உள்ளிட்டவை இருப்பதை கண்டறிந்து பிரக்யான் ரோவர் உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் நிலவில் சந்திராயன் 3 விண்கலத்தின் ரோவர் பாதுகாப்பாக உலா வரும் வீடியோவை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரோவரை, விக்ரம் லேண்டர் குழந்தையை போல் கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. […]
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்
செப்.18 முதல் 22 ஆம் தேதி வரை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடரில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக பொது சிவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. மழைக்கால கூட்டத்தொடர் அண்மையில் தான் முடிந்த நிலையில் தற்போது சிறப்பு கூட்டத்தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பு கூட்டத்தொடரில் 5 அமர்வுகள் நடைபெறும் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி […]
கனடாவில் அரிய வகை குடல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமி
கனடாவில் டிக் டாக் பிரபலமான சிறுமி ஒருவருக்கு அரிய வகை குடல் நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒன்பது வயதான பெல்லா தொம்சன் என்ற இந்தச் சிறுமிக்கு தற்பொழுது குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சிறுமி பிறந்ததில் இருந்தே குடல் உபாதையினால் பாதிக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிறந்தது முதல் குறித்த சிறுமி குடல் உபாதையினால் பாதிக்கப்பட்டு பெரும் அசவுகரியங்களை எதிர்நோக்கி வருகின்றார். இந்த சிறுமி டிக் டாக்கில் சுமார் 6.3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றார்கள் […]