காவிரியில் தண்ணீர் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் முழு அடைப்பு ! இயல்புவாழ்க்கை முடக்கம்:

தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநில முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் முழு ஆதரவு கிடைத்ததால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. பெங்களூருவில் நடிகர் சிவராஜ்குமார் தலைமையில் கன்னட திரையுலகினர் போராட்டம் நடத்தினர். காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்ததை எதிர்த்து கர்நாடகாவில் செப்டம்பர் 29ம் தேதி மாநில முழு […]

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் இல்லை!

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், இந்த வழக்கை விசாரித்து வந்த அமர்வு நீதிமன்றம் வழக்கை எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏற்கனவே பலமுறை செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றங்களை மாறி மாறி நாடியும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்ற குழப்பம் நீடித்தது. அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவில் செப்டம்பர் 20 […]

அண்ணாமலையுடன் படம் எடுத்த காவலர் பணியிட மாற்றம்!

அண்ணாமலையுடன்‌ புகைப்படம் எடுத்த காவலர் பணியிட மாற்றம்! – என்ன நடந்தது? கணேசன், காவலர் சீருடையில் அண்ணாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம், அண்ணாமலையின் சமூக வலைதளப் பக்கத்திலும் பகிரப்பட்டது ‘ என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் தமிழக பா‌.ஜ.க தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டுவருகிறார். கடந்த 27-ம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு வருகைதந்த அண்ணாமலை, கூடலூர் நகரில் தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டார். பின்னர், கூடலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து அன்றைய […]

மார்க் ஆண்டனி ஹிந்தி பதிப்பிற்கு லஞ்சம் ! மத்திய அமைச்சு விசாரணை!

  விஷால் – எஸ். ஜே சூர்யா நடிப்பில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி . இந்தப்படத்தின் ஹிந்தி பதிப்பிற்காக தாம் மத்திய திரைப்பட தணிக்கை குழுவிற்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக நடிகர் விஷால் வெளிப்படையான குற்றச்சாட்டொன்றை முன்வைத்தார். அதில் தமது சினிமா வாழ்க்கையில் இவ்வாறான நிலை தமக்கு ஏற்பட்டது இல்லை என குறிப்பிட்டுள்ளார். #Corruption being shown on silver screen is fine. But not in real life. […]

மின்சார கட்டணம் மீண்டும் அதிகரிக்குமா?

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார கட்டணத்தை அதிகரிக்க அனுமதி கோரப்பட்டுள்ளது மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இவ்வருடம் எதிர்பார்த்த அளவு நீர் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போனமையினால், மின்சார உற்பத்திக்கு கூடுதல் செலவு ஏற்பட்டதாக அதன் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்தார். இந்த வருடம் 4500 கிகாவாட் நீர் மின் திறன் எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், 3750 கிகாவாட் நீர் […]

பாகிஸ்தான் பள்ளி அருகே குண்டு வெடிப்பு – 52 பேர் மரணம்! 132 பேர் காயம்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் (Balochistan) மாகாணத்தில் முஹம்மது நபியின் பிறந்தநாளைக் கொண்டாடும் ஊர்வலத்தில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. A bomb blast rocked #Pakistan on the occasion of Eid Milad-Un-Nabi. pic.twitter.com/a8Uty2I4H0 — Hindustan Times (@htTweets) September 29, 2023 பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளி அருகே வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது, குறைந்தது 132 […]