தீர்வை தா? வீதிக்கு இறங்கிய பண்ணையாளர்களின் குடும்பங்கள்! வேதனையில் மனித சங்கிலி போராட்டம்!

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேச்சல் தரை நிலத்தை மீட்டு தர கோரிய அறவழிப் போராட்டமானது இன்றுடன் 16 வது தினத்தை கடந்துள்ளது. அத்துமீறிய பெரும்பான்மை இனத்தவர்களின் குடியேற்றம் காரணமாக கால்நடைகளுடைய மேய்ச்சல் தரை கவலிகரம் செய்யப்பட்டுள்ளதாகவும் தங்களது மேய்ச்சல் தரைகளை மீளவும் தங்களிடம் ஒப்படைக்க கோரிய சுழற்சி முறையிலான போராட்டத்தை மேற்க்கொண்டுவருகின்றனர். மேய்ச்சல் தரைகளை பல அரசியல்வாதிகள் தங்களுக்கு பல உத்தரவாதங்களை வழங்கி செல்கின்ற போதிலும் இன்றும் கூட மாதவன மயிலத்தமடு பகுதிகளில் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய […]

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க முடியாது! அது சட்ட விரோதமானது! ஜனக்க சொல்கிறார்

இலங்கை மின்சார சபை கோரும் கட்டணத் திருத்தம் சட்டவிரோதமானதென பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 22 வீதம் அல்லது அனைத்து அலகுகளுக்கும் 8 ரூபா அதிகரிப்பு கோரப்பட்டுள்ளதாக  ஜனக்க ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இலங்கை மின்சார சபை கோரியுள்ள புதிய கட்டணத் திருத்தத்திற்கு அமைவாக,  0-30 அலகுகளுக்கு நுகர்வோர் செலுத்த வேண்டிய கட்டணம் 80 வீதத்தால் அதிகரிக்கப்படும். எவ்வாறாயினும், பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவானது இவ்வருடத்தில் மூன்றாவது தடவையாக மின்சார கட்டணத் திருத்தம் தொடர்பில் […]

பஸ் கவிழ்ந்து விபத்து 3 பேர் பலி ! 30 பேர் காயம்!

குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  – 3 பேர் பலியானதுடன் , 30 பேர் காயமடைந்துள்ளனர். தென்காசியில்  இருந்து பேருந்தில்  54 சுற்றுலா பயணிகள் ஊட்டி சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ழது விபத்து காரணமாக அப்பகுதியில் ஒன்றரை மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.  

“பாடு நிலா”வில் பாரட்டு பெற்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் நசீர்!

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியமும் கலைஸ்ரீயின் கலைஸ்ரீ மன்றமும் இணைந்து தினகரன், தினகரன் வாரமஞ்சரி பத்திரிகைகளின் ஊடக அனுசரணையுடன் 29.09.2023 கொழும்பு பழைய நகர சபை மண்டபத்தில் நடத்திய பாடு நிலா பாலாவின் பாமாலையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கலந்நு கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் தலைவர். எஸ்.விஜயராஜா கூறுகிறார். நிகழ்வு குறித்து  மேலும் கருத்து தெரிவித்த அவர். பாடு நிலா பாலாவின் […]

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் ! 4 ஆம் திகதி மாபெரும் மனித சங்கிலி போராட்டம். தமிழ் கட்சிகள் தீர்மானம்

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகி நாட்டைவிட்டு சென்ற விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பை காண்பிக்க போராட்டங்களை நடத்த தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. இன்று (29) யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசியக் கட்சி உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி இந்த முடிவை எடுத்தனர். இதன்படி, எதிர்வரும் ஒக்டோபர் 4ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் மிகப்பெருமெடுப்பில் […]