கனடிய அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்த பழங்குடியினர்

சஸ்கற்றுவான் பகுதியைச் சேர்ந்த இரண்டு பழங்குடியின சமூகத்தினர் கனடிய அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். போதை மருந்து பயன்பாடு தொடர்பிலான பிரகடனத்திற்கு அமைவாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மிதமிஞ்சிய அளவில் பழங்குடியின சமூகத்தினர் போதைப் பொருள் பயன்படுத்துவதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக, கலாச்சார ரீதியாக, மற்றும் சுகாதார ரீதியாக போதை மருந்து பயன்பாடு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளதாக பழங்குடியின சமூகத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
காசாவில் வாழும் கனேடியர்களுக்கு…..

இஸ்ரேல் மற்றும் காசாவில் வாழும் கனேடியர்களுக்கு கனடா அரசு செய்தி ஒன்றைத் தெரிவித்துக்கொண்டுள்ளது. காசாவுக்குப் பயணிப்பதைத் தவிர்க்குமாறு கனடா அரசு கனேடியர்களைக் கேட்டுக்கொண்டுள்ளதுடன், இஸ்ரேலிலும், பாலஸ்தீனத்திலும் வாழும் கனேடியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் 1,419 கனேடியர்களும், பாலஸ்தீனத்தில் 492 கனேடியர்களும் வாழ்ந்துவருகிறார்கள். இதற்கிடையில், தாக்குதலில் ஒரு கனேடியர் கொல்லப்பட்டதாகவும், இருவரைக் காணவில்லை என்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றும் கனேடிய ஏஜன்சி ஒன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் எரிபொருளின் விலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம்

இலங்கையில் எரிபொருளின் விலை இஸ்ரேலில் தற்போது தொடர்ந்து வரும் போர் நிலமை காரணமாக அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினரிடையே ஏற்பட்டுள்ள போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துள்ளது. இதனால் இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலைகள் உயர்வடையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேலிய பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள் எச்சரிக்கை விடுத்த – ஹமாஸ்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் நீடித்துவரும் நிலையில் பாலஸ்தீன மக்கள் வசிக்கும் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதலின் போதும் ஒரு இஸ்ரேலிய பணயக்கைதி கொல்லப்படுவார் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீதான சமீபத்திய தாக்குதலுக்குப் பின்னர் ஹமாஸ் உறுப்பினர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் போது இஸ்ரேலியர்களை பணயக் கைதிகளாகப் பிடித்து சென்றுள்ளனர். இந்நிலையில் ஹாமாஸால் பணய கைதிகளாக கொண்டு செல்லப்பட்ட மக்கள் கொல்லப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை […]
ஈஸ்ட் வெஸ்ட் சிட்டி கெம்பஸ் பட்டமளிப்பு விழா!

ஈஸ்ட் வெஸ்ட் சிட்டி கெம்பஸ் (EAST WEST CITY CAMPUS) பல்கலைக்கழகத்தின் 2022 – 2023 ஆண்டுக்கான வருடாந்த பட்டமளிப்பு விழா பலாங்கொடை டயமண்ட் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வானது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதோடு, EAST WEST CITY CAMPUS இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் எண்டர்சன் மற்றும் இரத்தினபுரி மாவட்ட தலைமை பொறுப்பதிகாரி மகேஸ்வரன் இந்திரராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, கற்கை நெறிகளை […]
நீதி விசாரணை கோரி எதிர்வரும் 20 ஆம் திகதி ஹர்த்தால்!

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியமை தொடர்பில் முழுமையான நீதிவிசாரணை நடத்த வலியுறுத்தியும், நீதித்துறையில் இருந்தாலும் தமிழர் என்பதால் இன ஒடுக்குமுறைக்குள்ளாகுவதை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் தமிழ்த் தேசிய கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 20ஆம் திகதி ஹர்த்தால் போராட்டத்தை நடத்தவுள்ளன. ஹர்த்தால் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கும் தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நேற்று (09) இடம்பெற்றது. இதன்போதே எதிர்வரும் 20ஆம் […]
காவிரி நதி நீர் எங்கள் உரிமை -சீமான்

காவிரி விவகாரம் 2024 தேர்தலில் பாதிக்குமா எனக் கேட்கிறார்கள், பாதிக்குமா இல்லை… நான் பாதிக்க வைப்பேன். தேர்தலில் ஒரு இடத்தில்கூட இந்த காங்கிரஸ், பா.ஜ.கவை வெல்ல விடாமல் தடுக்க வேண்டும்” – சீமான் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழையில்லை, வறட்சியால் அணைகளில் நீர்வரத்து 53% குறைந்துவிட்டது, ஆகவே தமிழ்நாட்டுக்குத் தருவதற்கு, கர்நாடகாவிடம் தண்ணீரே இல்லை” எனப் பழைய புராணத்தை மீண்டும் வாசித்து, காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் உத்தரவுகளைக் காலில் போட்டு மிதித்து தமிழ்நாட்டுக்குத் தேவையான […]
கராத்தே வீரர்கள் 15 பேர் தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு

மத்திய மாகாணத்தில் சொடோகன் 2023 கராத்தே செம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்ற கம்பளையைச் சேர்ந்த எஸ்.பி, சந்திரமோகன் சொடோகன் கராத்தே கழகத்தின் வீரர்கள் 15 பேர் தேசிய மட்டப் போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர், கண்டி திகனயிலுள்ள மத்திய மாகாண விளையாட்டுத் திணைக்கள அரங்கில் இந்த போட்டிகள் நடைப்பெற்றது. இதில் பல்வேறு வயது பிரிவுகளை கொண்ட வீரர்கள் கலந்துகொண்டு இருந்தனர். கம்பளை வீரர்கள் 15 பேர் தேசிய மட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளமை விஷேட அம்சமாகும் . கம்பளையை சேர்ந்த […]
உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு !!

நூருல் ஹுதா உமர் உலக குடியிருப்பு தினத்தை முன்னிட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 600,000/= பெறுமதியான மானிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு பூர்த்தியாக்கப்பட்ட வீடுகளை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய வீடமைப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட முகாமையாளர் ஏ.பி. இராங்கனி அவர்களும், விசேட அதிதிகளாக சாய்ந்தமருது பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. முவஃப்பிகா, தேசிய வீடமைப்பு அதிகார […]
மன்னாரில் சுற்றுச் சூழலை பாதுகாக்க மன்னார் ஆயர் அழைப்பு!

( வாஸ் கூஞ்ஞ) -மன்னாரில் இடம்பெற்று வரும் சுற்று சூழலை அழிப்பதற்கு எதிராக தொண்டு நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும், இயற்கைவள பாதுகாப்பு செயற்பாட்டாளர்களும், இயற்கைவள சட்டவாளர்களும், பொதுமக்களும் இணைந்து செயலாற்றுவதற்கு அழைப்பு விடுகின்றோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை இவ்வாறு ஊடகங்கள் மூலம் அழைப்ப விடுத்துள்ளார். -மன்னார் வாழ்வுதய இயக்குனர் அருட்பணி செபமாலை அன்ரன் அடிகளார் தலைமையில் வாழ்வுதயத்தில் திங்கள் கிழமை (09) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது மன்னார் மறைமாவட்ட […]