பங்களாதேஷ் ரயில் விபத்து
பங்களாதேஷ் ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷின் வடகிழக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்துடன் ரயில் தடம் புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேல் மோதலின் போது அமெரிக்க படையினர் எவரேனும் தாக்கப்பட்டால்….?
ஹமாஸ் இஸ்ரேல் மோதலின் போது அமெரிக்க படையினர் எவரேனும் தாக்கப்பட்டால் அமெரிக்கா திருப்பி தாக்குவதற்கு தயார் என அமெரிக்காவின் இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளார். என்பிசியின் மீட் த பிரசில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள பிளிங்கென், ஈரான் ஆதரவு சக்திகளால் மத்திய கிழக்கில் போர் மேலும் தீவிரமடையலாம் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இந்த மோதலின் போது அமெரிக்க படையினர் இலக்கு வைக்கப்பட்டால் அதற்கான பதில் நடவடிக்கையில் ஈடுபட பைடன் நிர்வாகம் தயாராகவுள்ளது எனவும் […]